சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் ஏற்றி டிரைவர் கொலை

Added : செப் 10, 2019
Advertisement

சிவகங்கை : சிவகங்கை அருகே, கார் ஏற்றி, டிரைவரை கொலை செய்த வழக்கில், அவரது தொழில் கூட்டாளி உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.

மதுரை, கே.புதுாரைச் சேர்ந்தவர், கார் புரோக்கர் முத்துக்குமார், 45. இவர், ராமேஸ்வரம் அரசு போக்குவரத்து கழக டிரைவராக இருந்து, பணி நீக்கம் செய்யப்பட்டவர். செப்., 2 இரவு, மர்ம நபர்கள், இவரை காரில் கடத்தி, கோமாளிப்பட்டி கிராபைட் ஆலை வளாகத்திற்குள், கார் ஏற்றி கொலை செய்தனர்.சிவகங்கை தாலுகா போலீசார் விசாரித்தனர். 8ம் தேதி இரவு, 10:30 மணிக்கு, சுந்தரநடப்பு என்ற இடத்தில் காரில் வந்த மதுரை, கே.புதுாரைச் சேர்ந்த முத்துபாண்டி என்பவரை விசாரித்தனர்.

அவரது திட்டப்படி, முத்துக்குமாரை கொலை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்தனர். அவரது தகவல்படி, எம்.வேலாங்குளம், சிவன், 32, என்பவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, இரு கார்களை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறியதாவது:முத்துக்குமாரும், முத்துபாண்டியும், ஒரு காலத்தில், தனியார் பஸ்சில், டிரைவராக இருந்தவர்கள். அந்த நட்பில், வேலை இழந்த முத்துகுமார், சிங்கப்பூரில் இருந்து வந்த முத்துபாண்டியுடன் சேர்ந்து, கார் புரோக்கர் தொழில் செய்ததுடன், வாடகை கார் ஓட்டி வந்தார்.நட்பு ரீதியாக, முத்துக்குமாரின் குடும்ப செலவிற்கு, 14 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார்.

இப்பணத்தை கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், தன் வீட்டிற்கு வரக்கூடாது என, முத்துபாண்டியிடம், முத்துக்குமார் தெரிவித்து உள்ளார்.இதில், ஆத்திரமுற்ற முத்துபாண்டி, மூன்று பேருடன் சேர்ந்து, முத்துக்குமாரை கார் ஏற்றி கொலை செய்துள்ளார். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X