பொது செய்தி

தமிழ்நாடு

குன்னுார் நீராவி இன்ஜின் திருச்சிக்கு பயணம்

Added : செப் 10, 2019
Advertisement
 குன்னுார் நீராவி இன்ஜின் திருச்சிக்கு பயணம்

குன்னுார் : குன்னுாரில் உள்ள, நுாற்றாண்டு பழமை வாய்ந்த, உலகின், ஒரே நிலக்கரி நீராவி இன்ஜின், பராமரிப்பு பணிக்காக திருச்சிக்கு சென்றது.

கடந்த, 1914ல், சுவிட்சர்லாந்தில் வடிவமைக்கப்பட்டு, 1918ம் ஆண்டு முதல், நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வந்த, நிலக்கரி நீராவி இன்ஜின், தற்போதும் நல்ல நிலையில் உள்ளது.உலகில், நிலக்கரியால் இயங்கக் கூடிய, ஒரே நீராவி இன்ஜின் என்ற பெருமை, இந்த இன்ஜினுக்கு உள்ளது.மலை ரயில் இன்ஜினை முழுமையாக பராமரித்து, இயக்க, சுற்றுலா பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு, நீலகிரி மாவட்டம், குன்னுாரில் இருந்து, ஊட்டி வரை இயக்கப்பட்ட, இந்த இன்ஜினின் சோதனையோட்டம் வெற்றி பெற்றது.

எனினும், பயணியரை ஏற்றிச் செல்லும் அளவுக்கு, முழு பராமரிப்பு இல்லாமல் இருந்தது. தற்போது, ரயில்வே அமைச்சகம், தெற்கு ரயில்வே மற்றும் சேலம் கோட்ட அதிகாரிகளின் முயற்சியால், இந்த இன்ஜினை மீண்டும் இயக்க, ஏற்பாடு நடந்து வருகிறது. குன்னுார் பணிமனையில் இருந்து, ஒரு பெட்டியில், இந்த இன்ஜின் இணைக்கப்பட்டு, திருச்சி பணிமனைக்கு சென்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X