சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பீதியை கிளப்பிய, 'வாட்ஸ் ஆப்' புரளி

Added : செப் 10, 2019
Advertisement
 பீதியை கிளப்பிய, 'வாட்ஸ் ஆப்' புரளி

வேலுார் : ஒரே தண்டவாளத்தில், இரண்டு ரயில்கள் நிறுத்தப்பட்டதால், பயணியர் அச்சமடைந்தனர்.

வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து, அரக்கோணத்திற்கு, பயணியர் மின்சார ரயில், நேற்று காலை, 6:30 மணிக்கு புறப்பட்டது.இதன் பின், காலை, 7:00 மணிக்கு, சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்லும், ரயிலும் சென்றது.பயணியர் மின்சார ரயில், காட்பாடி அருகே, ஜாப்ராபேட்டையில், காலை, 8:15 மணிக்கு, சிக்னலுக்காக நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்து இறங்கிய பயணியர், அதே தண்டவாளத்தில், 100 மீ., இடைவெளியில், குடிநீர் ரயில் நின்றிருந்ததை கண்டு, அதிர்ச்சி அடைந்தனர்.

பயணியர் சிலர், 'ஒரே தண்டவாளத்தில், இரண்டு ரயில்கள், எதிரெதிரே வந்து விட்டன. 100 மீ., இடைவெளியில், இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டதால், பெரும் விபத்து தடுக்கப்பட்டது' என, சமூகவலைதளமான, 'வாட்ஸ் ஆப்'பில் தகவல் பரப்பினர்.இதனால், பயணியர் அச்சமடைந்து, ரயிலில் இருந்து இறங்கி, 2 கி.மீ., நடந்து, காட்பாடி ரயில் நிலையத்திற்கு சென்றனர்.காட்பாடி ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ஜோலார்பேட்டை - அரக்கோணம் பயணியர் மின்சார ரயில், சிக்னல் கோளாறு காரணமாக, ஜாப்ராபேட்டையில் நிறுத்தப்பட்டது.

இதனால், அதன் பின், சென்னைக்கு சென்ற, தண்ணீர் ரயிலும், 100 மீ., இடைவெளியில் நிறுத்தப்பட்டது.இதை தவறாக புரிந்து கொண்ட சிலர், வாட்ஸ் ஆப்பில், தகவல் பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தினர்.ஜோலார்பேட்டை - காட்பாடி மார்க்கத்தில், தண்டவாளம் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், இந்த மார்க்கத்தில், அடிக்கடி சிக்னல் கோளாறு ஏற்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X