சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வானிலிருந்து விழுந்த மர்ம பொருள்

Added : செப் 10, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
 வானிலிருந்து விழுந்த மர்ம பொருள்

வேலுார் : கே.வி.குப்பம் அருகே, வானிலிருந்து கீழே விழுந்த பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே, கவசம்பட்டு கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, வானிலிருந்து மர்ம பொருள் ஒன்று கீழே விழுந்துள்ளது.

அப்பகுதி மக்கள் சென்று, பார்த்தபோது, டியூப் லைட் சோக் போல, வெள்ளை நிறத்தில் கிடந்த அந்த பொருளில் இருந்து, பச்சை நிற விளக்கு, விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தது. போலீசார், அந்த பொருளை, கே.வி.குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர். வேலுார் மாவட்ட தடயவியல் நிபுணர் விஜய் தலைமையிலான குழுவினர், நேற்று அந்த பொருளை ஆய்வு செய்தனர்.அது, வானிலையை ஆய்வு செய்ய, கல்லுாரி மாணவர்களால், ஆய்வுக்காக, வானில் பறக்க விடப்பட்ட கருவி என தெரிந்தது.

போலீசார் கூறுகையில், 'இந்த விபரம், சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, அந்த பொருள், எஸ்.பி., அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Adhithyan - chennai,இந்தியா
13-செப்-201908:11:43 IST Report Abuse
Adhithyan முடியும் அய்யா முடியும்
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
12-செப்-201911:48:46 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ வானிலையை ஆய்வு செய்ய, கல்லுாரி மாணவர்களால், ஆய்வுக்காக, வானில் பறக்க விடப்பட்ட கருவி என தெரிந்தது. //// எவன் வேணும்னாலும் இப்படிப் பறக்க உட முடியுமா ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X