சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பயங்கரவாத கும்பல் ஊடுருவல்! சென்னையில் சிக்கினார் முக்கிய புள்ளி?

Updated : செப் 11, 2019 | Added : செப் 10, 2019 | கருத்துகள் (54)
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் மாநிலம் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். சென்னையில் ஜமாத் - உல் - முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி சிக்கியுள்ளார்.



latest tamil news



நாடு முழுவதும் ஐ.பி. எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் என்.ஐ.ஏ. என்ற தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பயங்கரவாத கும்பலுக்காக நிதி திரட்டுவோர் ஆதரவு அளிப்போரை கைது செய்து வருகின்றனர். மேலும் மத்திய புலனாய்வு அமைப்புகள் நடத்திய தொடர் விசாரணையில் பயங்கரவாதிகள் தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களை குறிவைத்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக தென் மண்டல ராணுவ கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் சைனி நேற்று முன் தினம் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் முழுவதிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்கள் அல் லாமி கஹ்தான் மற்றும் அல் ஷ்வாய்லி சாதிக் ஆகியோரை கடந்த மாதம் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். இவர்களை விசாரித்த போது இருவரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பியதும், இவர்களுடன் மேலும் சிலரும் தப்பியதும் தெரிந்தது.

இவர்களை கைது செய்ய 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீசாரின் உதவியை ஈராக் போலீசார் நாடினர். சர்வதேச போலீசார் நடத்திய விசாரணையில் அல் லாமி கஹ்தான் மற்றும் அல் ஷ்வாய்லி ஆகியோர் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பது தெரிய வந்தது. இவர்களுடன் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 12 பேரும் ஊடுருவி உள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து இவர்களை கைது செய்ய தமிழகம் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். போலீஸ் கமிஷனர்கள் ஐ.ஜி. மற்றும் டி.ஐ.ஜி.க்கள் மாவட்ட எஸ்.பி.க்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.


சென்னையில் சிக்கினார்:


பீஹார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவில் 2013ல் குண்டுவெடிப்பு நடந்தது. இதற்கு மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வரும் ஜமாத் - உல் - முஜாகிதீன் என்ற பயங்ரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்த முக்கிய புள்ளி ஒருவர் சென்னை நீலாங்கரையில் பதுங்கி இருப்பதை ஐ.பி. மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உறுதி செய்தனர். இதுகுறித்து கோல்கட்டா சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னை போலீசார் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு நீலாங்கரையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ஷேக் அசுதுல்லா 35, என்பவரை கைது செய்தனர்.


latest tamil news



இவர் 10 மாதங்களாக சென்னையில் கட்டுமான ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா உயிருக்கு குறிவைத்து சதி திட்டம் தீட்டி வந்துள்ளார். சென்னை ஆலந்துார் நீதிமன்றத்தில் நேற்று ஷேக் அசுதுல்லா ஆஜர்படுத்தப்பட்டு மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


சிக்கியது எப்படி?


ஜாமத் - உல் - முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளிகளில் ஒருவராக செயல்பட்டு வந்த ஷேக் அசுதுல்லா வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் துப்பாக்கி சுடுவதில் வல்லவர். சென்னையில் தன் கூட்டாளிகளுக்கு பயிற்சி அளித்தாகவும் கூறப்படுகிறது. 'பேஸ்புக்' வழியாக மேற்கு வங்கத்தில் உள்ள தன் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். மத்திய புலனாய்வு அதிகாரிகள் இளம்பெண் போல இவரது பேஸ்புக் பக்கத்தில் நுழைந்து ஆசை காட்டி பிடித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-செப்-201921:47:59 IST Report Abuse
Jaga Praveen தமிழ்நாட்டில எந்த முஸ்லிம்க்கு தமிழ் தெரியலையோ அவன் பயங்கரவாதி..
Rate this:
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
11-செப்-201921:52:23 IST Report Abuse
Bebetoஅவர்களுக்கு, இடம் கொடுத்து வசதி செய்து தருபவர்களை உள்ளே கட்டாயம் தள்ள வேண்டும்....
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
12-செப்-201907:55:54 IST Report Abuse
Nallavan Nallavanபாக்கி தமிழ் கற்பது கடினமா என்ன ?? விஜயகாந்த் படத்தில் பார்த்ததில்லையா ??...
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
11-செப்-201920:43:11 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ மத்திய புலனாய்வு அதிகாரிகள் இளம்பெண் போல இவரது பேஸ்புக் பக்கத்தில் நுழைந்து ஆசை காட்டி பிடித்துள்ளனர். //// ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ...... அங்கே மடங்கிட்டானா ??
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
11-செப்-201919:34:09 IST Report Abuse
spr "துஷ்டனைக் கண்டால் தூர விலகு" என்பது பழமொழி இதனை நம் மக்கள் உறுதியாகக் கடைபிடித்தால், பல பிரச்சினைகள் தீரும். பயங்கரவாதிகள் சுயநலம் கருதி, பணக்காரன் தங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவான் என்பதால், பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதியில்தான் இடம் பிடிப்பார்கள் அவர்களுக்கு உதவி செய்து நல்ல பெயர் பெற்ற இவர்களை காவற்துறை கைது செய்ய வந்தால் அந்த அப்பாவி மக்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்பிக்கை அவர்களையும் மீறி காவற்துறை நடவடிக்கை எடுத்தால் மனித நேயம் என்ற பெயரில் அப்பாவி மக்களைக் காவற்துறை கொடுமைப்படுத்துகிறது என்று கூவ ஒரு கூட்டம் இருக்கிறதுஆனால் இந்த நாசமாய் போகிறவர்கள் அவர்களைத்தான் வெடி வைத்துக் கொல்லுவார்கள் எப்பொழுதும் உங்களை இந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்கும் காவற்துறை உங்களை நம்பாது உங்களுக்கு உதவாது ஊடகங்களுக்கு, அரசியல்வியாதிகளுக்கு எல்லோருக்கும் இது ஒரு பெரிய வாய்ப்பு ஊதி ஊதி பெரிதாக்கி பிழைப்பை நடத்துவார்கள் இனி ஆள வாய்ப்பே இல்லையென்ற வைகோ, சீமான் கமல் போன்ற அரசியல்வியாதிகளுக்கு நாமோ ஆட்சிக்கு வரப்போவதில்லை அதனால் இது குறித்து நாம் கவலைப்படத்தேவையில்லை என்று ஆளும்கட்சியை குறைகூற ஒரு நல்ல வாய்ப்பு அவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்று காட்டிக்கொள்ள வாய்ப்பு. எனவே தங்கள் உயிரை உடமைகளைக் காத்துக் கொள்ள பொது மக்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். சந்தேகப்படும் நபர்களை ஒதுக்குங்கள் ஆதரவு தராதீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X