பொது செய்தி

இந்தியா

'லேண்டர்' தொடர்பு: இஸ்ரோ காத்திருப்பு

Updated : செப் 11, 2019 | Added : செப் 10, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
லேண்டர் ,தொடர்பு, இஸ்ரோ, காத்திருப்பு

பெங்களூரு: நிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட 'லேண்டர்' சாதனத்துடனான தொடர்பை மீண்டும் பெறுவதற்காக காத்திருப்பதாக 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்வதற்காக 'சந்திரயான் - 2' விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் அனுப்பப்பட்ட லேண்டர் சாதனம் நிலவில் மெதுவாக தரையிறங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்யும் 'ஆர்பிட்டர்' சாதனம் அனுப்பிய படங்களில் நிலவின் மேற்பரப்பில் லேண்டர் சாதனம் இருப்பது தெரியவந்தது. நிலவின் மேற்பரப்பில் ஒரு நிலவு நாள் அதாவது பூமியை பொறுத்தவரை 14 நாட்கள் ஆய்வு செய்யும் வகையில் லேண்டர் சாதனம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனால் அதனுடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையம் மேற்கொண்டுள்ளது.

'லேண்டர் சாதனத்துடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறோம். தொடர்பு கிடைக்கும் என காத்திருக்கிறோம்' என நேற்று வெளியிட்ட செய்தியில் இஸ்ரோ கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-செப்-201914:01:53 IST Report Abuse
ஆப்பு காத்திருப்பு போராட்டம்...
Rate this:
Cancel
Sundaram Bhanumoorthy - coimbatore,இந்தியா
11-செப்-201913:59:19 IST Report Abuse
Sundaram Bhanumoorthy எனக்கு ஒரு நியாயமான சந்தேகம். இவ்வளவு டெக்னாலஜி வளர்ந்த இந்த காலத்திலேயே வெறும் ஒரு மெஷின இறக்கறத்துக்கு எல்லா நாட்டுக்கும் நாக்கு தள்ளுதுன்னா அந்த காலத்திலேயே அமெரிக்கா எப்படி ஆட்களை நிலவிலே இறக்கி இருப்பாங்க
Rate this:
Sampathkumar Sampath - Karur,இந்தியா
11-செப்-201916:17:54 IST Report Abuse
Sampathkumar Sampathஅது அப்பவே அவனுக கோயபெல்ஸ் அப்பிடின்னு நிரூபிச்சுட்டானுக. சூப்பர் டுபாக்கூர் ஸ்டுடியோ. அப்ப இதெல்லாம் சாத்தியமே இல்ல. நம்பர் ஒன்னு ஸீன்....
Rate this:
11-செப்-201917:01:28 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்அவர்கள் நிலவில் இறங்கவில்லை , போட்டோ சூட் நடத்தி இறங்கியதாக காட்டி இருக்கிறார்கள். அதை அந்த படமே காட்டிக்கொடுக்கிறது , அதில் பல குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன....
Rate this:
rajan - erode,இந்தியா
11-செப்-201918:31:46 IST Report Abuse
rajanஅந்த காலத்திலேயே (பல கோடி வருடங்களுக்கு முன்பே) ஒரு மலையையே தூக்கி சுமந்து சாதனை படைத்த நாடு. எண்ணையின்றி பறக்கும் விமானத்தை உருவாக்கிய நாடு இந்தியா. ஒரே பெண் நூறு பிள்ளைகளை பெற்ற நாடு இந்தியா. குரங்கை வைத்து கடலில் பாலம் கட்டிய நாடு இந்தியா. இன்னும் பல...
Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
11-செப்-201920:22:01 IST Report Abuse
Sathyanarayanan Bhimaraoஅண்ணாமலை ஜெயராமன் அவர்களே அமெரிக்கர்கள் நமக்கு எவ்வளவு வேண்டுமெனும் வேண்டாதவர்களாக இருக்கலாம். அதற்காக 20ம் நூற்றாண்டின் மாபெரும் விஞ்ஞான சாதனையை உங்கள் ஸ்டேட்டஸ் படத்தில் உள்ள ஜந்துவைப் போன்ற ஒருவர் இழித்துரைத்ததை பரப்பாதீர்கள்....
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-செப்-201902:10:13 IST Report Abuse
Pugazh V நம்ம தல முன்னாடி ஒருவாட்டி, "மேகமூட்டம் இருந்தால் ரேடார் ல வராது" என்ற உவகமகா கண்டு பிடிப்பை சொன்னார். அவரிடம் கைட்கவும். இப்போது பாதி நிலா தான் தெரியுது..வெய்ட் பௌர்ணமி அன்று நம்ம லேண்டரே தெரியும். என்று விஞ்ஞானிகள் ஐ.மிஞ்சும் கண்டு பிடிப்பை சொல்வார்
Rate this:
blocked user - blocked,மயோட்
11-செப்-201904:15:01 IST Report Abuse
blocked userபொறியியலும் பொரியலும் வித்தியாசம் தெரியாது... இருந்தாலும் கருத்து மட்டும் ஏதோ விஞ்ஞானி போல போடுற... ஆல் டைம்......
Rate this:
Ranga - paapaanpuram,இந்தியா
11-செப்-201906:15:18 IST Report Abuse
Rangaஏண்டா .. நீ கருத்து போட்டால் அது சரி.. அடுத்தவர் போட்டால் அது உனக்கு எரிச்சலா? ஜெலுசில் குடி .....
Rate this:
blocked user - blocked,மயோட்
11-செப்-201910:04:00 IST Report Abuse
blocked userரங்கா அவன் கருத்தை மெச்ச ஒரே ஒரு ஆள் நீதான். ராடார் என்றால் இவனுக்கு ஒரு எழவும் தெரியாது. இருந்தாலும் அதே பல்லவியை பாடிக்கொண்டு இருப்பான். மேகம் என்பது தண்ணீர் என்பது இவனுக்கு புரியவில்லை. அது சரி.. திருட்டு திராவிடமத விசுவாசிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?...
Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
11-செப்-201915:36:37 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன்/ராகேஷ் சர்மா மற்றும் கல்பனா சௌல காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விண்வெளி சென்ற விஞ்ஞானிகள்/ கல்பனா ஒரு அமெரிக்கர். அமெரிக்கா சார்பாக விண்வெளி சென்றார். காங்கிரஸ் கட்சி கல்பனாவை அனுப்பியது புதிய தகவல். புழுகுறதுக்கு ஒரு அளவே இல்லையா புகழ். ஸ்டாலின் பற்றி மட்டும் எழுதுவது நலம்....
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
11-செப்-201915:41:38 IST Report Abuse
chakraதலைக்கும் ஒன்றும் தெரியாது ஸ்டாலின் போலவே . தெரிந்து கொள்ள வயதும் ஆர்வமும் இல்லை...
Rate this:
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
11-செப்-201915:47:39 IST Report Abuse
Kunjumaniபுகழ் சந்தடி சாக்குல கல்பனா சாவ்லா விண்வெளி சென்றது காங்கிரஸ் ஆட்சியில் என்று சொருகினாரே பார்க்கணும், கழக கண்மணியாக இந்த ஒரு தகுதி போதும்....
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
11-செப்-201918:13:44 IST Report Abuse
chakraபுகழை திட்டறதுக்கு முன்னாடி தல பிதற்றியதை ஏன் யாரும் கண்டுக்க மாட்டிங்களா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X