லேண்டர் தொடர்பு: இஸ்ரோ காத்திருப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'லேண்டர்' தொடர்பு: இஸ்ரோ காத்திருப்பு

Updated : செப் 11, 2019 | Added : செப் 10, 2019 | கருத்துகள் (14+ 74)
லேண்டர் ,தொடர்பு, இஸ்ரோ, காத்திருப்பு

பெங்களூரு: நிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட 'லேண்டர்' சாதனத்துடனான தொடர்பை மீண்டும் பெறுவதற்காக காத்திருப்பதாக 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்வதற்காக 'சந்திரயான் - 2' விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் அனுப்பப்பட்ட லேண்டர் சாதனம் நிலவில் மெதுவாக தரையிறங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்யும் 'ஆர்பிட்டர்' சாதனம் அனுப்பிய படங்களில் நிலவின் மேற்பரப்பில் லேண்டர் சாதனம் இருப்பது தெரியவந்தது. நிலவின் மேற்பரப்பில் ஒரு நிலவு நாள் அதாவது பூமியை பொறுத்தவரை 14 நாட்கள் ஆய்வு செய்யும் வகையில் லேண்டர் சாதனம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனால் அதனுடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையம் மேற்கொண்டுள்ளது.

'லேண்டர் சாதனத்துடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறோம். தொடர்பு கிடைக்கும் என காத்திருக்கிறோம்' என நேற்று வெளியிட்ட செய்தியில் இஸ்ரோ கூறியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X