ஷேலா ரஷீதுக்கு முன், 'ஜாமின்'

Added : செப் 10, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 ஷேலா ரஷீதுக்கு முன், 'ஜாமின்'

புதுடில்லி : தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட, ஜம்மு - காஷ்மீர் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவர், ஷேலா ரஷீதுக்கு, டில்லி நீதிமன்றம், நேற்று, முன், 'ஜாமின்' வழங்கியது.

ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர், ஷேலா ரஷீத், 31; டில்லி, ஜவஹர்லால் பல்கலை மாணவர் சங்க தலைவராக பதவி வகித்தவர். தற்போது, ஜம்மு - காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற கட்சியின், துணை தலைவராக உள்ளார்.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவை, மத்திய அரசு ரத்து செய்ததை, இவர் கடுமையாக விமர்சித்திருந்தார். ஜம்மு - காஷ்மீரில், ராணுவத்தினர், மனித உரிமைகளை மீறுவதாகவும், சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.இதையடுத்து, அலோக் ஸ்ரீவத்சவா என்ற வழக்கறிஞர், ஷேலாவுக்கு எதிராக, டில்லி போலீசில் புகார் அளித்தார்.

அதில், இந்திய ராணுவத்தினர் பற்றி, ஷேலா, பொய் தகவல்களை பரப்புவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஷேலாவுக்கு எதிராக, டில்லி போலீசார், தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்தனர்.இந்நிலையில், ஷேலா சார்பில், டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், முன் ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த, நீதிபதி, பவன் குமார் ஜெயின், ஜம்மு - காஷ்மீர் மக்கள் இயக்க கட்சி துணை தலைவர் ஷேலாவுக்கு, முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan - Madurai,இந்தியா
11-செப்-201915:01:09 IST Report Abuse
kannan ஏற்கனவே தேசத்துரோகி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட சைக்கோவை எம்.பியாக்கி அழகு பார்க்கிறது திமுக. இதோ இன்னொரு திமுக எம்.பி.
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
11-செப்-201911:23:22 IST Report Abuse
suresh kumar காஷ்மீரி பண்டிட்டுகள் துரத்தப் பட்டபோது, இவர் பிறந்திருக்கவேயில்லை. ஆதலால், அவர்களின் வேதனை இவருக்குத் தெரியாது. மேலும், இவர் படிக்கும் பல்கலையில், வேறு விதமாக கர்ப்பிக்கிறார்களோ என்னவோ?
Rate this:
Share this comment
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-செப்-201914:42:15 IST Report Abuse
Thiaguவளர்ப்பு சரியில்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X