சிறுமியின் முதுகிலிருந்து தையல் ஊசி அகற்றம்

Added : செப் 11, 2019
Advertisement

புதுடில்லி : டில்லியில், 10 வயது சிறுமியின் முதுகில் பாய்ந்திருந்த தையல் ஊசியை, எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், அறுவை சிகிச்சை மூலம், வெற்றிகரமாக அகற்றினர்.

அறுவை சிகிச்சைதலைநகர் டில்லியைச் சேர்ந்த, 10 வயது சிறுமி, தன் முதுகில் கடுமையான வலி இருப்பதாக, கடந்த சில நாட்களாக, தன் பெற்றோரிடம் கூறி வந்தார். இதை, அந்த சிறுமியின் பெற்றோர் பொருட்படுத்தவில்லை.வலி அதிகமாகவே, சிறுமியை, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 'எக்ஸ் ரே' எடுத்து பார்த்ததில், சிறுமியின் முதுகில் உள்ள தசைக்குள், தையல் ஊசி பாய்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டின் படுக்கையில் கிடந்த ஊசி, சிறுமி படுத்தபோது, அவரது முதுகிற்குள் பாய்ந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அதே மருத்துவமனையில், சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆனால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பகுதியிலிருந்து, அந்த ஊசி நகர்ந்து விட்டதால், அதை வெளியில் எடுக்கவில்லை. இதற்கிடையே, சிறுமியின் வலி, மேலும் அதிக மானது. இதையடுத்து, டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.முதுகு பகுதியில் உள்ள தசைகள் அசைவால், ஊசி நகர்ந்து சென்றது தெரிய வந்தது. இதைஅடுத்து, இரண்டு வாரங்கள் டாக்டர்களின் கண்காணிப்பில், சிறுமி வைக்கப்பட்டிருந்தார். பாதிப்புஇதன் பின், சமீபத்தில் சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

முதுகுத் தண்டுவடத்துக்கு மிக அருகில், 1 அங்குல ஆழத்துக்குள் பாய்ந்திருந்த ஊசி, அகற்றப்பட்டது.தற்போது அந்த சிறுமி, குணமடைந்து, வீட்டுக்கு திரும்பி விட்டார். டாக்டர்கள் கூறுகையில், 'அந்த ஊசி, சிறுமி யின் முதுகுத் தண்டு வடத்துக்கு மிக அருகில் இருந்தது. தண்டுவடத்தில் பாய்ந்திருந்தால், மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X