அரசியல் செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் சேமிப்புக்காக இஸ்ரேல் பயணம்: முதல்வர் அறிவிப்பு

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement
தண்ணீர் ,சேமிப்புக்காக, இஸ்ரேல், பயணம்,பசு, பழனிசாமி

சென்னை: மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்து சென்னை திரும்பிய முதல்வர் பழனிசாமி அடுத்து இஸ்ரேல் நாட்டிற்கு செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

பிரிட்டன், அமெரிக்கா, துபாய் நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்து முதல்வர் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:

உங்கள் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்ததா?
தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் துவங்க ஆர்வமாக இருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து சென்று வெளிநாட்டில் தொழில் செய்வோர் ஆர்வமுடன் உள்ளனர். நீண்ட காலமாக தமிழகத்தில் இருந்து எந்த முதல்வரும் வெளிநாடு செல்லவில்லை என்ற குறைபாடு இருந்தது. அதை தீர்த்து வைத்துள்ளோம்.

'கோட் சூட்' அணிந்து இந்தியா திரும்புவீர்கள் என்று எதிர்பார்த்தோம். நீங்கள் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருக்கிறீர்களே?
வெளிநாட்டு தொழில் அதிபர்களை சந்திக்கும் போது அவர்கள் உடையில் இருந்தால் தான் சரியாக இருக்கும். நம் விருப்பத்தை தெரிவிக்காமல் அவர்களுடைய விருப்பத்தை நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.

வெளிநாட்டு பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் எப்போது நடைமுறைக்கு வரும்?
குறுகிய காலத்தில் நடைமுறைக்கு வர இருக்கின்றன. திறமையான தொழில் அதிபர்களுடன் தான் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இன்னும் பல முதலீட்டாளர்கள் வர இருக்கின்றனர்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக அமைச்சர்கள் மற்றும் முதல்வரை விமர்சனம் செய்து வருகிறாரே?
நான் முதல்வராக பதவியேற்றது முதல் இன்று வரை எதிர்ப்பு குரல் கொடுக்கிறார். அவர் நினைத்தது நடக்கவில்லை; அந்த எரிச்சல் பொறாமையில் இப்படி வார்த்தைகளை உதிர்க்கிறார். வெளிநாடுகளில் சுற்றுலா பயணியரை ஈர்க்கக்கூடிய அளவிற்கு பொழுதுபோக்கு அம்சங்களை நவீன முறையில் புகுத்தி உள்ளனர். அதை தமிழகத்திலும் புகுத்த வேண்டும்.

அமெரிக்காவில் பபல்லோ நகரில் கால்நடை பண்ணைக்கு சென்றீர்கள்; அந்த அனுபவம் எப்படி இருந்தது?
மிகச் சிறப்பாக இருந்தது. ஒரே இடத்தில் 3000 பசுக்கள் வளர்க்கின்றனர். ஒரு பசு ஒரு நாளைக்கு 70 லிட்டர் பால் கொடுக்கிறது. இங்குள்ள பசு 15 முதல் 20 லிட்டர் பால் மட்டும் கறக்கிறது. தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் 70 ஆயிரம் லிட்டர் முதல் 80 ஆயிரம் லிட்டர் வரை பால் சேர்க்கிறோம். அங்கு ஒரே இடத்தில் ஒரு பண்ணையில் 1.20 லட்சம் லிட்டர் பால் கறக்கின்றனர். அந்த தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள சென்றோம். அதை தமிழகத்தில் பயன்படுத்தும் போது பயனுள்ளதாக இருக்கும்.

அங்குள்ள மக்கள் எப்படி வரவேற்றனர்?
அனைவரும் ஆர்வமுடன் வரவேற்றனர். அங்கு உழைப்பதற்கு என்றே தமிழர்கள் பிறந்துள்ளனர் என்று கருதுகிறேன்; அந்த அளவிற்கு உழைக்கின்றனர். பல தொழில் அதிபர்கள் என்னை சந்தித்தபோது தமிழகத்தில் 'ஐ.டி. பார்க்' அமைக்க முன்வருகிறோம் என விருப்பம் தெரிவித்தனர். அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப துறையில் 35 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான் இருக்கின்றனர்.

உங்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் பிற நாடுகளுக்கும் தொடருமா?
நிச்சயம் தொடரும். அடுத்து இஸ்ரேல் செல்ல உள்ளோம். நாம் 1 ஏக்கருக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீரை இஸ்ரேலில் 7 ஏக்கருக்கு பயன்படுத்தும் நவீன வசதியை புகுத்தி உள்ளனர். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதோடு கழிவுநீரை மறு சுழற்சி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர். அதை அறிந்து வர இஸ்ரேல் செல்ல திட்டமிட்டிருக்கிறோம்.

பல்வேறு துறைகளில் முதலீட்டாளர்களுடன் பேசி உள்ளீர்கள். எந்தெந்த துறைகளில் அதிக முதலீடு செய்ய விருப்பமாக இருக்கின்றனர்?
அனைத்து துறைகளிலும் முதலீடு செய்ய விருப்பமாக இருக்கின்றனர். மருத்துவ துறையில் உள்ளவர்களும் என்னை சந்தித்தனர்; மருத்துவ துறை தொடர்பாக தொழில் துவங்க ஆர்வம் காட்டினர். தமிழகத்தில் அனைத்து வசதிகளும் இருப்பதால் ஆர்வம் காட்டுகின்றனர்.

வெளிநாடுகளில் பொருளாதார மந்தநிலை நிலவக்கூடிய நிலையில் தமிழகத்திற்கு வரக்கூடிய முதலீட்டில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என நினைக்கிறீர்களா?
பாதிப்பு ஏற்படும் என்றால் எப்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவர்; இந்தியாவில் தொழில் துறையில் இரண்டாவதாகவும் சிறு தொழிலில் முதன்மையாகவும் இருப்பது தமிழகம். இதை தெரிந்து தான் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

லண்டனில் தமிழில் உரையாற்றினீர்கள். அந்த அனுபவம் எப்படி உள்ளது?
வெளிநாட்டில் தமிழில் உரையாற்றியது பெருமையாக இருந்தது. நம் கருத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அவரவர் மொழியில் கூறினால் தான் அவர்களுக்கு புரியும். எனவே சில நேரங்களில் ஆங்கிலத்திலும் சில நேரங்களில் தமிழிலும் பேசினேன். இவ்வாறு முதல்வர் கூறினார்.


ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு:

பிரிட்டன், அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு, முதல்வர், ஆக., 28ல், சுற்றுப்பயணம் சென்றார். மூன்று நாடுகளில், சுற்றுப்பயணத்தை முடித்து, நேற்று அதிகாலை, 2:40 மணிக்கு, சென்னை திரும்பினார்.விமான நிலையத்தில், போலீஸ், டி.ஜி.பி., திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முதல்வரை வரவேற்க, அ.தி.மு.க.,வினர், கட்சி கொடிகளுடன் திரளாக வந்திருந்தனர். மேள தாளங்கள் ஒலிக்க, முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது அவருக்கு ஆளுயர மாலை அணிவித்ததுடன், அவர் மீது மலர்களை துாவி வரவேற்றனர்.


பன்னீர், 'ஆப்சென்ட்'

சென்னை திரும்பிய, முதல்வரை வரவேற்க, துணை முதல்வர், பன்னீர்செல்வம், விமான நிலையம் செல்லவில்லை. நேற்று காலை, முதல்வரின் வீட்டிற்கு சென்று, சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து, முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், விமான நிலையம் செல்லாத அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், முதல்வர் வீட்டிற்கு சென்று, வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
12-செப்-201910:09:07 IST Report Abuse
கல்யாணராமன் சு. இங்கிருந்து மந்திரிகள் (வேஷ்டி கட்டி இல்லை சூட் போட்டு), அதிகாரிகள், அடிவருடிகள் போறதுக்கு பதிலா, அதே செலவில் அங்கேருந்து நிபுணர்களை கூட்டிட்டு வந்தால், இங்கேயுள்ள நிறையபேர்களுக்கு அறிவுரை வழங்கலாம்.... கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், அந்த நிபுணர்களின் செலவையும் அந்தந்த நாட்டுல அல்லது நிறுவனகலோ ஏற்றுக்கொள்ளும் ... நம்ம பண்ற செலவும் கம்மியாகும் . ஏன் இந்த மாதிரி யோசிக்கமாட்டேன்றாங்க ?
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
11-செப்-201922:21:11 IST Report Abuse
தமிழ் மைந்தன் ஜெயலலிதா எவ்வளவு சொத்துகளை சேர்ந்தாலும்....கருணாநிதி போல பல குடும்பங்களுக்கு சொத்து சேர்க்கவில்லை.....
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
11-செப்-201920:09:02 IST Report Abuse
Anantharaman Srinivasan தண்ணீர் சேமிப்புக்காக இஸ்ரேல் பயணம்: முதல்வர் அறிவிப்பு... சாக்கடை தண்ணீ தெருவில் வழிந்தோடாமல் இருக்கும் நாடுகளை போய் பார்த்து தமிழ்நாட்டை improve பண்ணவும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X