பொது செய்தி

தமிழ்நாடு

விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி ஓட்டுச்சீட்டு காகிதத்துக்கு 'டெண்டர்'

Added : செப் 11, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி ஓட்டுச்சீட்டு காகிதத்துக்கு 'டெண்டர்'

சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் காகிதம் கொள்முதலுக்கு 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2016 அக்டோபரில் முடிவுக்கு வந்தது. நீதிமன்ற வழக்குகள் நிலுவை மழை வெள்ளம் லோக்சபா பொதுத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வருகிறது. கடைசியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது 'அக்டோபர் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்' என மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது.

இதன்படி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஓட்டுச்சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. தற்போது வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து மின்னணு ஓட்டு இயந்திரங்களை எடுத்து வரும் முயற்சியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. ஊரக உள்ளாட்சிகளுக்கு ஓட்டுச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கென ஓட்டுச்சீட்டு அச்சிடுவது உள்ளிட்டவற்றுக்காக காகித கொள்முதல் பணியை அரசு அச்சுத்துறை துவக்கியுள்ளது.

செப்., 20ம் தேதி டெண்டர் கடைசி நாள் எனவும் இது 2019ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலுக்கான சிறப்பு வகை காகிதங்களுக்கான டெண்டர் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
11-செப்-201911:58:02 IST Report Abuse
Ashanmugam இனி தமிழ் நாட்டில் கொள்ளையோ கொள்ளை அடிக்க போகிறார்கள். பொது மக்கள் கஜானா காலி ஆக போகிறது.
Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-செப்-201917:52:21 IST Report Abuse
அம்பி ஐயர்இப்ப மட்டும் என்ன வாழுதாம்....??? இப்போ தனி அலுவலர்கள் கொள்ளை..... அப்புறம்... ஊராட்சி தலைவர்... செயலர்... கவுன்சிலர்...ன்னு கொள்ளை போகும்.......
Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-செப்-201917:53:05 IST Report Abuse
அம்பி ஐயர்நடத்திருவாங்க....???...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-செப்-201911:16:28 IST Report Abuse
Bhaskaran இதையும் நாங்க நம்பணுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X