சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'சரக்கு வாங்கணும்... காசு கொடு...'; போலீசாரை 'படுத்திய' போதை ஆசாமி

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (10)
Advertisement
'சரக்கு வாங்கணும்... காசு கொடு...'; போலீசாரை 'படுத்திய' போதை ஆசாமி

பல்லடம்: போதை ஆசாமி ஒருவர், மது வாங்க பணம் கேட்டு, போலீசிடம் கெஞ்சியது, பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர், மூர்த்தி, 35; கூலித் தொழிலாளி. நண்பர் பிரகாஷ் என்பவருடன், 8ம் தேதி மாலை, செட்டிபாளையம் ரோட்டில் உள்ள மதுக்கடைக்கு சென்றார்.போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட, சரக்கு பாட்டில்களால், மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதில், மூர்த்தியின் தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது. போதையில் தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாத மூர்த்தி, ரத்தம் சொட்ட, சொட்ட நடுரோட்டில் நின்று, கலாட்டா செய்தார்.

தகவல் அறிந்து சென்ற, எஸ்.ஐ., விஜயகுமாரிடம், 'சரக்கு வாங்க காசு வேண்டும்' என கெஞ்சினார். 'எனக்கு வாழ விருப்பமில்லை' என, உளறியவாறு, உடைந்த பாட்டிலால் தன்னை தானே காயப்படுத்தி கொண்டார். ரத்தம் வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் மிரண்டு ஓடினர்.

ஆம்புலன்சை வரவரழைத்த போலீசார், மூர்த்தியை, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், யாரிடமும் சொல்லாமல், திடீரென மாயமாகி விட்டார். மூர்த்தி மற்றும் தகராறில் ஈடுபட்ட நண்பர் பிரகாஷ் ஆகியோரை, பல்லடம் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-செப்-201911:24:37 IST Report Abuse
Malick Raja அவரவர் திருந்தாதவரை இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இயல்பாகவே மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்படாமல் இருக்க வாய்ப்பே இல்லை ..முதலில் மனிதன் மனிதனாக மனிதநேயத்துடன் வாழ்வதே மனித மாண்புக்கு உகந்த ஒன்றாக இருக்கமுடியும் .
Rate this:
Share this comment
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
12-செப்-201914:56:16 IST Report Abuse
s.rajagopalan நான் இருக்கும் பகுதியில் ஒரு குடிசை பகுதி இருக்கிறது. அங்கிருப்போரில் பல கணவன்மார்கள், ஒன்று, சம்பாதித்த பணத்தை குடிக்க செலவழித்துவிடுவார்கள், இல்லை, சோம்பேறிகளாக குடித்துவிட்டு தூங்குவார்கள். இவர்களின் மனைவி மார்கள் கடுமையாக உழைத்து குடும்பத்தை நடத்துவார்கள். 50 வயதிற்குள் பெரும்பாலானவர்கள் இறந்து விடுவார்கள். ஒரு விசித்ரம் என்னவென்றால், அவர்கள் இறந்த பிறகு மனைவிமார்கள் ஆரோக்கியமாகவும் , மகிழ்ச்சியுடனும் , பொலிவுடனும் கூட இருப்பார்கள் இந்த குடி மக்களின் கலாச்சாரத்தை எப்படி குலைத்துவிட்டது. வெட்கமோ, மன சாட்சியோ இல்லாத இரண்டு கழகங்களும் என்று ஒழியுமோ அன்றுதான் தமிழ் நாட்டிற்கு விடிவு காலம். நடக்குமா.....
Rate this:
Share this comment
Cancel
sri - trichy,இந்தியா
12-செப்-201910:36:00 IST Report Abuse
sri குடும்பக்கட்டுப்பாடு இல்லாமல் உற்பத்திசெய்தல் இந்தநிலைமை தான். நாம் இருவர் நமக்கு ஒருவர். இப்படி வாழ்தல் இந்திய ஒரு ஐம்பது வருடத்தில் முன்னேறலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X