பொது செய்தி

இந்தியா

வங்கிகளில் விவசாய நகை கடன் விரைவில் ரத்து

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (44)
Share
Advertisement

புதுடில்லி: 'வங்கிகளில் விவசாயத்திற்கான நகை கடன் வழங்குவது குறைக்கப்பட்டு வருகிறது; அக். 1 முதல் 4 சதவீத வட்டியில் நகைக் கடன் என்ற திட்டம் இருக்காது' என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



latest tamil news



வங்கிகளில் விவசாயிகளுக்காக 7 சதவீத வட்டியில் நகை கடன் வழங்கப்படுகிறது. இதில் முறையாக திரும்ப செலுத்துவோருக்கு 3 சதவீத வட்டி தொகை மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் வரை ஆவணங்கள் இன்றியும் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்கள் இருந்தால் 3 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை நிறுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக வங்கிகளில் நகை கடன் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகள் பயன் பெறுவதற்காக நகை கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் இதர வாடிக்கையாளர் களுக்கும் கடன் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் விவசாய நகை கடனுக்கான வட்டி குறைப்பால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட 5 சதவீத தொகையை மத்திய அரசு வழங்கும். ஆனால் நடப்பு பட்ஜெட்டில் 5 சதவீதத்திற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால் வங்கிகள் நஷ்டத்திற்கு உள்ளாகும்.


latest tamil news



இந்த காரணத்திற்காக விவசாய நகை கடன் திட்டத்தை நிறுத்த அனைத்து வங்கிகளும் திட்டமிட்டுள்ளன. அதன் துவக்கமாக விவசாய நகை கடன் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது. வரும் அக். முதல் விவசாய நகை கடன் திட்டம் ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். அதேநேரத்தில் 9 சதவீத வட்டியில் வழங்கப்படும் அனைவருக்குமான நகை கடன் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
12-செப்-201908:14:43 IST Report Abuse
Nallavan Nallavan விவசாயக்கடன் வாங்கும் விவசாயிகள் அனைவரும் ஏழை விவசாயிகளா ?? விவசாயி என்றாலே ஏழையா ?? விவசாயக்கடன் ரத்தால் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை """" விவசாயக்கடனை ரத்து செய்யவேண்டும் """" என்று கூவிக்கொண்டே இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஏற்பார்களா ?? கஷ்டப்பட்டு உழைத்து வருமான வரியும் கட்டும் மாதச் சம்பளக்காரனின் வரிப்பணம் இதை ஈடுகட்டும் ..... .... மகாத்மா காந்தி கீ ஜேஜேஜேய் ....... அம்பேத்கருக்கு நன்றி .......
Rate this:
Cancel
sankar - ghala,ஓமன்
11-செப்-201918:18:12 IST Report Abuse
sankar நல்ல விஷயம் , ஒருத்தன் கூட கடன் வாங்கி விவசாயம் பண்றது கிடையாது , எல்லாம் ரொட்டேஷன் (வட்டிக்கு விடறது) தான் பண்ணுறாங்க , இது முற்றிலும் உண்மை நானே கண் கூட பார்த்திருக்கிறேன் , கடன் வாங்கி துஸ்பிரயோகம் தான் அதிக அளவில் நடக்கிறது , அசல் திருப்பி கேட்ட உடன் , விவசாயி Ingra போர்வையில் நீலி கண்ணீர் விட வேண்டியது , வங்கியில் இருந்து வாங்கும் பணம் மக்கள் உடையது , கடன் வாங்கி அனுபவிச்சிட்டு கடன் காட்டும் நேரம் தள்ளுபடி செய்ங்க சொல்லி நிர்வாண போராட்டம் பன்ன வேண்டியது ( கடன் வாங்கும் so called விவசாயி அனைவரும் நகை தங்கம் வச்சுருக்கவன் தான் , ஒரு சிறிய விவசாயி , 1 acre கும் குறைவான நிலம் வச்சு இருக்கிறவன்கு லோன் eligibility கிடையாது )
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
11-செப்-201917:41:06 IST Report Abuse
M.COM.N.K.K. இப்போதும் அடித்து சொல்கிறேன் ஒரு ஊருக்கு 5 பேருக்கு மட்டுமே ரூபாய் 2000 முதல் தவணை கிடைத்துள்ளது.மற்ற விவசாயிகளுக்கு தற்போதைய நிலையில் திருநெல்வேலி அல்வாதான்.விவசாய வாரிசுகளுக்கு தற்போது பட்டா மாற்றம் என்பது முடியாத காரியம் ஆகும் இது தெரியாமல் சொல்வதெல்லாம் முறை அற்றது.தற்போதைய நிலையில் பட்டா மாற்றம் எளிதான காரியமாக தெரியவில்லை.அதனால்தான் சொல்கிறேன் பலன் அடைபவர்கள் மிக மிக குறைவு பலன் அடையாதவர்கள் மிக மிக அதிகம் இதுதான் உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X