பொது செய்தி

தமிழ்நாடு

மோட்டார் வாகன புதிய சட்டம் அமல் எப்போது?

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (16)
Advertisement

சென்னை: வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து, முதல்வர், இ.பி.எஸ்., சென்னை திரும்பியுள்ள நிலையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அரசாணை, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


போக்குவரத்து விதிகளை மீறினால், பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையில், புதிய மோட்டார் வாகன சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தை, தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா உட்பட, சில மாநிலங்கள், இன்னமும் செயல்படுத்தாமல் உள்ளன. தமிழகத்தில் தற்போது, பழைய சட்டப்படி, போலீசார் குறைந்தபட்ச அபராதமே வசூலித்து வருகின்றனர். ஆனால், நீதிமன்றங்கள், புதிய மோட்டார் வாகன சட்டப்படி, அதிக அபராதங்களை விதிக்க துவங்கி உள்ளன.

முதல்வர், இ.பி.எஸ்., வெளிநாட்டு பயணம் முடிந்து திரும்பியதும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த, அரசாணை வெளியாகும் என, அரசு வட்டாரத்தில், தகவல் வெளியானது. இந்நிலையில், முதல்வர், நேற்று சென்னை திரும்பினார்.

ஓரிரு நாட்களில், 'ஒரே நாடு - ஒரே ரேஷன்' திட்டம், புதிய மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றை, தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து, அமைச்சர்களுடன், முதல்வர் ஆலோசிக்க உள்ளார். அதன்பின்னர், புதிய மோட்டார் வாகன சட்டம், எப்போது அமலுக்கு வரும் என்பது தெரிய வரும்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
11-செப்-201912:42:24 IST Report Abuse
 Sri,India மக்கள் குடிக்காமல் திருந்தி விடுவார்கள் என்பதால் புதிய அபராதத்தை தமிழக அரசு இன்னமும் அமல்படுத்தாமல் நல்ல எண்ணத்துடன் உள்ளது . குடிமகன்களுக்கான அரசு இது??
Rate this:
Share this comment
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
11-செப்-201911:29:50 IST Report Abuse
JIVAN ரோட்டுல கிடக்குற மண் மணல் குழி இதனாலதான்டா முதல்ல விழுறான் அப்போதான் தலையில அடிபடுத்து அதை சரிபண்ண ஒரு சட்டமும் போடமாட்டானுவ ஏன்னா அதை அவனுங்க செய்யணும் . பாதுகாப்பான சாலையை கொடுத்துட்டு விதிமீறலுக்கு சட்டம் போட்ட சரின்னு சொல்லலாம் மக்கள் பாக்கெட்டுல இருக்கிறதா எப்படி உருவாளாம் என்றே ஆட்சிக்கு வந்ததுமுதல் செஞ்சிகிட்டு இருக்கானுவ .
Rate this:
Share this comment
11-செப்-201912:22:57 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்சரியாக இருக்கிற ரோட்டிலேயே , எட்டு போட்டு ஓட்டும் கூட்டம் இருக்கிறது. இவர்களுக்கு அபராதம் இன்னும் அதிகம் போடணும்....
Rate this:
Share this comment
Cancel
abdul rajak - trichy,இந்தியா
11-செப்-201910:12:29 IST Report Abuse
abdul rajak முஸ்லீம் ஜமாஅத் முஸ்லிம்கள் கண்டிப்பாக தலை கவசம் அணிந்து செல்லுமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள் . மொஹமட் நபி மக்கஹ் நகரில் பாதுகாப்பு காரணங்களுக்காக இரும்பு தலை கவசத்துடன் நுழைந்தார் .
Rate this:
Share this comment
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-செப்-201911:37:56 IST Report Abuse
NiranjanAbdul Rajak அவர்களே தயவு செய்து எல்லாவற்றிக்கும் ஜாதி மதங்களை இணைக்க வேண்டாம். உயிர் எல்லாவற்றுக்கும் பொதுவானது அதில் இந்து முஸ்லீம் கிறித்தவ வேறுபாடுகளை கொண்டு வரவேண்டாம். பாதுகாப்பு எல்லாவற்றுக்கும் பொதுவானது இதில் வேறுபாடு காட்ட வேண்டாம். உங்களின் இந்த கருத்தை வேறே செய்திகளிலும் பார்த்தேன்...
Rate this:
Share this comment
11-செப்-201912:21:55 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்அது எதிரிகளுக்கு தெரியாமல் நுழைந்தது. இது தலை பாதுகாப்பிற்கு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X