சபாநாயகர் சென்ற ரயிலில் தகராறு: போதை இளைஞர்கள் கைது

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (24)
Advertisement
சபாநாயகர், ஓம்பிர்லா, ரயில், தகராறு,போதை இளைஞர்கள்

புதுடில்லி: ஒடும் ரயிலில் மது அருந்தி, லோக்சபா சபாநாயகர் ஒம்பிர்லா உதவியாளரிடம் தகராறு செய்த 5 இளைஞர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

டில்லி- ம.பி., மாநிலம் இந்தூர் இடையேயான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த ரயிலில் லோக்சபா சபாநாயகர் ஒம்பிர்லா ஏ.சி.வகுப்பில் பயணித்தார். ரயில், ஹஸ்ரத் நிஜாமுதீன் ஸ்டேசன் வந்தபோது 5 இளைஞர்கள் சபாநாயகர் பயணித்த பெட்டியில் ஏறினர். ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் மது அருந்தி,பாட்டுப்பாடி, கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.





இதையறித்த சபாநாயகர் ஓம்பிர்லா தனது உதவியாளர் ராகவேந்திரனை அனுப்பி அவர்களை அங்கிருந்த அப்புறப்படுத்த உத்தரவிட்டார். உதவியாளர் சென்று விசாரித்த போது, 5 இளைஞர்களும் அந்த இடத்தில் இருந்து அகல மறுத்ததுடன், வாய்த்தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கூச்சலிட்டனர். இதனையடுத்து, ரயில்வே போலீசார் தகவல் தெரிவிக்கும்படி, ராகவேந்திராவுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்படி, அவரும், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

நள்ளிரவு 1 மணியளவில், உ.பி.,யின் மதுரா ரயில் நிலையம் வந்த போது, ரயில்வே போலீசார், இளைஞர்களை கைது செய்தனர். விசாரணையில் , அவர்கள் டில்லியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மேலும், அவர்களது பெயர் விகாஸ் தாகர், ராஜீவ், பிரிதம் சிங், மனோஜ் குமார், அமர்பிரீத் சிங் என தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
11-செப்-201913:50:28 IST Report Abuse
Rajas இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பஸ்கள் மற்றும் ரயில்களில் செல்வதில்லை. எல்லோரும் Flight மற்றும் பல வசதிகள் கொண்ட கார்களில் பயணம் செய்கிறார்கள். இவர்கள் பொது வாகனங்களை பயன்படுத்தினால் சமூக விரோதிகளுக்கு பயம் வரும்.
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
11-செப்-201911:50:16 IST Report Abuse
Varun Ramesh அரசாங்கமே விற்கிற மதுவை அருந்துவதும் அருந்தியபின் போதை ஏறுவதும் போதை ஏறியதும் உற்சாகமாய் ஆடிப்பாடி அட்டகாசம் செய்வதும் ஒரு குத்தமாண்ணே?
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
11-செப்-201910:54:03 IST Report Abuse
சுந்தரம் இந்தியாவில் ( பஞ்சாப் முதலிடம் கேரளா இரண்டாமிடம் கோவா மூன்றாமிடம் என்று தெரிந்தும்) டமில் நாட்டுக்காரர்கள் மட்டுமே மது அருந்துவது போல கருத்து எழுதும் பக்தர்களை நினைத்துப் பார்க்கிறேன்.
Rate this:
Share this comment
11-செப்-201912:16:14 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்முதல் மூன்று இடங்களுக்குள் வருவதற்கு தான் போட்டி நடந்துகொண்டிருக்கிறது , பொண்டாட்டி தாலியை அறுத்தாவது சீக்கிரம் வந்துவிடுவார்கள் , கவலை வேண்டாம்....
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
11-செப்-201913:46:24 IST Report Abuse
Rajasஇது உங்கள் சொல்படி நடக்கிற ஆட்சி தானே. ஒரு வார்த்தை மது விற்பனை வேண்டாம் என்று மேலே இருந்து சொன்னால் நாளைக்கே தமிழ் நாட்டில் மது ஒழிந்து விடாதா. அதை செய்தாலே பிஜேபிக்கு இங்கே நல்ல செல்வாக்கு வருமே....
Rate this:
Share this comment
agni - chennai,இந்தியா
11-செப்-201915:31:07 IST Report Abuse
agniபகுத்தறிவு திராவிட கட்சிகள் மட்டுமே ஆளும் பூமியில் டாஸ்மாக்கள் எப்படி வந்தது, வளர்ந்தது, கேட்க தான் செய்வார்கள் .குடி மனிதர்க்கு மூளையே வேலை செய்யாத போது எப்படி பகுத்தறிவு எப்படி வளரும்,ஆல்கஹால் பாதிப்பு புத்தி, இரத்தம் தான் அடுத்த தலைமுறைக்கும் போகும்,தமிழ்மண்ணில் ,பகுத்தறிவு திராவிடம் பேசும் கட்சிகள் ஏன் இத்தகைய குடியை உருவாக்கி விட்டு,இன்று வரை ஏன் இன்று கூட எதிர்க்காமல் பொறுப்பில்லாமல் ஏன் தமிழ்மக்களின் அறிவை ,தலைமுறைகளின் திறமையை குடியை கொடுத்து கெடுத்து கொண்டுள்ளார்கள்....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
11-செப்-201917:50:23 IST Report Abuse
சுந்தரம் அண்ணாமலை தமிழ் நாட்டில் இதுமாதிரி சம்பவங்கள் நடந்தால் டாஸ்மாக் நாடு என்கிறீர்கள். நடந்தது உத்த்ர பிரதேச எல்லையில். அங்கும் குடிகாரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உத்தராகான்ட்டில் மளிகை கடைகளில் விற்பனை செய்ய திட்டம் தயாராகிவிட்டதாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X