தலிபானுடன் பேச்சு கிடையாது : டிரம்ப் திட்டவட்டம்

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (4)
Advertisement
தலிபான், பேச்சு கிடையாது  : டிரம்ப் திட்டவட்டம்

வாஷிங்டன்:' ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகளுடனான சண்டைக்கு முடிவு காணப்பட்டு, அமைதி தீர்வு காண்பதில், தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன.மேலும், ஆப்கனில், 19 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து, தன்னை விடுவித்துக் கொள்ள, அமெரிக்கா, முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.இதை மையமாக வைத்து, அமெரிக்கா தலைமையில், ஆப்கன் அரசு மற்றும் தலிபான்களுடன், ஒன்பது சுற்று பேச்சு நடந்தது.இந்நிலையில், ஆப்கனில், தலிபான்கள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், அமெரிக்க வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.இதை தொடர்ந்து, தலிபான்களுடனான பேச்சை, அமெரிக்கா ரத்து செய்துள்ளது.


இதையடுத்து, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், நிருபர்களிடம் கூறியதாவது:தலிபான்களுடன் நடத்திய அமைதி பேச்சு முடிந்து போன கதை. இனி ஒரு போதும், தலிபான்களுடன் பேச்சு கிடையாது. அவர்களுடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை என்பதால் தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்தது.ஒரு பக்கம், பேச்சு நடத்திக் கொண்டே, தாக்குதல்களை நடத்தி, நெருக்கடி கொடுக்க, தலிபான்கள் முயற்சிக்கின்றனர்.
என்னால் அதை ஏற்க முடியாது. நான்கு நாட்களாக, தலிபான்கள் மீது, கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவில், அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.தலிபான்களை, ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம். ஆனால், ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறினால், அவர்கள் மீண்டும் உருவாவர். அதனால், ஆப்கானிஸ்தானிலிருந்து, அமெரிக்க படைகள் சரியான நேரத்தில் வெளியேறும்.இவ்வாறு, டிரம்ப் கூறினார்.'அமெரிக்கா வருந்தும்'
தலிபான்களுடனான பேச்சு இனி கிடையாது என, டிரம்ப் கூறியதற்கு பதில் அளித்து, தலிபான் செய்தி தொடர்பாளர், ஜபியுல்லா முஜாஹித் கூறியதாவது:ஆப்கனில் எங்கள் பணிகளை நிறைவேற்ற, இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று, ஜிகாத்; மற்றொன்று பேச்சு. பேச்சை நிறுத்த டிரம்ப் விரும்பினால், நாங்கள், முதல் வழியை கையில் எடுப்போம். இதற்காக, அமெரிக்கா நிச்சயம் வருந்தும்.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
11-செப்-201909:32:05 IST Report Abuse
 Muruga Vel குளிச்சு, கட்டும் துணியை துவைத்து உடுத்தி வந்தால் பேச்சு வார்த்தை துவங்க வாய்ப்பு இருக்கு
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
11-செப்-201909:03:35 IST Report Abuse
GMM பேனாவை கையில் வைத்து இருந்தால் பேசலாம். அவர்களுக்கு நடுநிலை எண்ணம் வரும். ஆயுதம் ஏந்துவது தீவிரவாதம் புரியதான். அவர்களுடன் அமெரிக்கா பேசி பலன் இல்லை. அமெரிக்காவிற்கு உலக நாடுகள் வன்முறை ஒழிய துணை புரிய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
11-செப்-201908:02:45 IST Report Abuse
RajanRajan ஒரு பக்கம், பேச்சு நடத்திக் கொண்டே, தாக்குதல்களை நடத்தி, நெருக்கடி கொடுக்க, தலிபான்கள் முயற்சிக்கின்றனர். இதே யுக்தியை தான் பாகிஸ்தானும் இந்தியாவில் கடைபிடிக்கிறார்கள். எனவே இந்த பக்கிகளிடம் பேச்சு வார்த்தை என்பது வேஸ்ட். அப்படியே முழுசா இவனுங்களை போட்டு தள்ளிட வேண்டியது தான் ஒரே தீர்வு.
Rate this:
Share this comment
Arul - thanjavur,இந்தியா
11-செப்-201910:58:15 IST Report Abuse
Arulஉண்மைதான் சகோ. ஆனால் போர் என்று வந்துவிட்டால், பலியாவது என்னமோ அப்பாவி பொதுமக்கள்தான். 2 தீவிரவாதிகள் பலியாவதற்குள் 20 அப்பாவிகள் உயிர் போய்விடுகிறது. நீங்கள் ஒன்றை கவனித்திருக்கலாம். போர் அறிவிப்பு வந்தால், ராணுவமோ தீவிரவாதிகளா தயக்கமோ கவலையோ கொள்வதில்லை. அப்பாவி பொதுமக்கள்தான் அஞ்சவேண்டியிருக்கிறது. இலங்கை, ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில் போர் நடந்தபோது , வெளியான படங்கள், வீடியோக்களை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இலங்கை தமிழ் மக்கள் போரினால் எவ்வாறு சீரழிந்தார்கள் என்பதும் நாம் அறிந்ததே. சிரியாவில் போரினால் ஒருபக்கம் அழிந்தார்கள். இன்னொருபுறம், போரிலிருந்து தப்புவதற்காக, படகில் தப்பி வந்தபோது கடலில் மூழ்கி பலபேர் மடிந்தார்கள். சிறுவன் அயலானின் உடல் கடற்கரையில் ஒதுங்கி கிடந்த காட்சி மீடியாக்களில் வெளியானபோது, இந்த உலகமே கண்ணீர் விட்டது. அதனால் போர்ஒரு தீர்வல்ல. இருந்தாலும் அமெரிக்காவின் ஆணவத்தால் ,சூழ்ச்சியாலும் தீவிரவாதம் வளர்ந்துகொண்டே இருப்பதும் வேதனையளிக்கிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X