இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம்

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (14)
Advertisement
 இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம்

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பயங்கரவாதத்தின் கோர தாண்டவத்தை உலகம் உணர்ந்தது. நியூயார்க்கில் கம்பீரமாக இருந்த இரட்டை கோபுரங்கள், அல்-குவைதா பயங்கரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்டன.

கடந்த 2001 செப்., 11ம் தேதி காலை 8:46 மணிக்கு (அமெரிக்க நேரப்படி), அல்-குவைதா பயங்கரவாதிகள் 19 பேர், அமெரிக்காவுக்கு சொந்தமான நான்கு பயணிகள் விமானங்களை கடத்தினர். முதலிரண்டு விமானங்களை தாழ்வாக பறக்க வைத்து நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்களின் மீது அடுத்தடுத்து மோத செய்தனர். மோதிய ஒரு மணி 42 நிமிடத்துக்குள், தலா 110 மாடிகள் கொண்ட இரண்டு கட்டடங்களும் தரைமட்டமாயின. அருகிலிருந்த 10 கட்டடங்களும் பாதிப்புக்குள்ளாகின.இதில் இரண்டு விமானங்களில் இருந்த பயணிகள் 147 பேரும், வணிக மைய கட்டடத்தில் இருந்த 2,606 பேரும் பலியாகினர்.மூன்றாவது விமானத்தை எர்லிங்டன் என்ற இடத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதச் செய்தனர். இதில்விமானத்தில் இருந்த 59 பேரும், பென்டகனில் இருந்த 125 ராணுவ வீரர்களும் இறந்தனர்.

நான்காவது விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளுக்கும், அதிலிருந்த பயணிகளுக்கும் சண்டை நடந்தது. முடிவில் இதுவும் சாங்ஸ்வில் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில் 40 பேர் பலியாகினர். இச்சம்பவத்தால்அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே அதிர்ந்தது.இந்த தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-குவைதா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்பை ஒழித்துக்கட்ட, 'பயங்கரவாதிகள் மீது போர்' என்ற நடவடிக்கையை அமெரிக்கா துவக்கியது. தளராத நம்பிக்கையுடன் இந்த ஒற்றை குறிக்கோளில் பெரும் வெற்றி கண்டது. ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா மற்றும் அல்-குவைதா பயங்கரவாதிகள் மீது, அமெரிக்கா மற்றும் 'நேட்டோ' படையினர் தாக்குதல் தொடுத்தனர்.
பழிக்குப் பழி
சுமார் 9 ஆண்டுகளாக நடந்த தீவிர தேடுதல் வேட்டையின் முடிவில் 2011 மே 2ம் தேதி, ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள பங்களாவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.'பீனிக்ஸ்' பறவைசாம்பலில் இருந்து எழும் 'பீனிக்ஸ்' பறவை போல, இரட்டை கோபுரம் இருந்த இடத்தில், புதிதாக வர்த்தக மைய கட்டடம் 2014 நவ., 3ல் திறக்கப்பட்டது. 'நேஷனல் செப்., 11 'மெமோரியல் அண்ட் மியூசியம்', பென்டகன் மற்றும் சாங்ஸ்வில் பகுதியில் நினைவு மையங்கள் திறக்கப்பட்டன.


Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
11-செப்-201917:04:12 IST Report Abuse
Sampath Kumar நாஸ்ட்ரடாமஸ் என்ற ஜோதிடர் வான ஆராய்சி நிபுணர் அன்றய எழுதிய குறிப்பில் இது உள்ளது எப்படி இத்தனை துல்லியமாக அவர் கணித்தார் ??? அல்லது அந்த கணிப்பை உண்மையாக யாரோ செய்த சதி?? என்று ஆராய்சி இன்னும் நடந்து கொண்டு உள்ளது மனிதம் நிலவில் கால் பதித்தான் என்பதை போல
Rate this:
Share this comment
Cancel
11-செப்-201914:40:18 IST Report Abuse
என் மேல கை வெச்சா காலி வினை விதைத்தவன் தினை அறுப்பான்.
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
11-செப்-201912:49:26 IST Report Abuse
Vijay D Ratnam அமெரிக்கா இஸ்லாமிய பயங்கரவாதிகளை தெருநாயை அடிச்சி கொல்வது மாதிரி வெரட்டி வெரட்டி அடிச்சி கொல்வது நியாயம் என்று உலகத்துக்கு உணர்த்திய சம்பவம் அரங்கேறிய தினம். இஸ்லாமியர்களை உலகெங்கும் சந்தேக கண்ணோடு பார்க்க தொடங்கிய தினம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X