பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ள முன்னெச்சரிக்கை பணி: நிதிக்கு போராடும் பொதுப்பணி துறை

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (17)
Advertisement
வெள்ள முன்னெச்சரிக்கை, நிதி, பொ.ப., துறை

சென்னை: சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளுக்கு நிதி பெறும் முயற்சியை, பொதுப்பணித் துறை மீண்டும் துவக்கியுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலங்களில், கடலோர மாவட்டங்களான, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், அதிக சேதங்களை சந்திக்கின்றன. எனவே, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட, நீர்வழித் தடங்களை துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.





இதற்காக, அரசிடம் இருந்து, பொதுப்பணித் துறையினர் நிதி கேட்பது வழக்கம். இந்தாண்டு, நீர்வழித்தட முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்கு, 10 கோடி ரூபாய், அரசிடம் கேட்கப்பட்டது. ஒவ்வொரு பணிக்கும் திட்ட மதிப்பீடு அதிகமாக இருப்பதாக கூறி, நிதி வழங்க, நிதித்துறை மறுத்து விட்டது.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: திட்ட மதிப்பீடு கூடுதலாக இருப்பதாக கருதி, நிதி வழங்க, நிதித்துறை மறுத்துள்ளது. அதே நேரத்தில், பட்ஜெட்டில், இப்பணிகளுக்கு, 9.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அதை சுட்டிக்காட்டி, இந்த நிதியை தரும்படி, பொதுப்பணித் துறை செயலர் வாயிலாக, நிதித்துறை செயலரிடம், மீண்டும் கேட்கப்பட்டு உள்ளது. ஒரு வாரத்தில், நிச்சயம் ஒப்புதல் கிடைத்து விடும். இம்மாத இறுதிக்குள், நான்கு மாவட்ட நீர்வழித் தடங்களில் முன்னெச்சரிக்கை பணிகள் துவங்கும். பருவ மழை முடிவுக்கு வரும் வரை, இந்த பணிகள் தொடர்ந்து நடக்கும் வகையில், ஒப்பந்தம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-செப்-201917:42:45 IST Report Abuse
அம்பி ஐயர் கொள்ளையடிக்கிறதுக்கு நிதி பத்தலையாமா....??? தானே...கஜா இன்னமும் பிற புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ஒருவருக்கே பல முறை பணப்பட்டுவாடா நடந்தது.... அரசுத் துறையில் இருக்கும் பணம் அரசு அதிகாரிகளின் பணம்.... ஏதாவது பொய்யைச் சொல்லி பொய்யான பில்களைத் தயாரித்து பல கோடிகள் சுருட்டலாம்....
Rate this:
Share this comment
Cancel
Mano - Dammam,சவுதி அரேபியா
11-செப்-201917:37:18 IST Report Abuse
Mano நேரடியாக நிதியை ஒவொரு பஞ்சாயத்திலும் கொடுத்து இரண்டு அதிகாரிகளை நியமித்து, மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் இந்த இந்த பணிகள் செய்ய நிதி கொடுக்கப்பட்டிருக்கிறது, பணிகள் நிறைவேறாவிட்டால் புகாரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர், துறை மந்திரி, முதல் மந்திரி என்று தெரிவிக்க வசதி செய்து கொடுக்கவேண்டும். அதோடு நுகர்வோர் கோர்ட்டில் வாதாட இலவச சட்ட ஆலோசகரும் நியமிக்கவேண்டும். இப்படி செய்தால் நிதியை சரியாக செலவழிப்பார்கள் வேலையும் முடியும்.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
11-செப்-201913:06:53 IST Report Abuse
J.Isaac மக்கள் வரி பணத்தை சீரழித்த துறைகளில் முக்கிய பங்கு இந்த துறையை சாரும் . அமைச்சருக்கும் எம்எல்ஏக்கும் பஞ்சாயத்து தலைவர்களுக்கும் மற்றும் அநேக மக்களுக்கு பொன் முட்டை இடும் வாத்து.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X