துபாயில் சிக்கிய 200 இந்தியர்கள்: நாடு திரும்ப ஏற்பாடு

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (20)
Advertisement
துபாயில் சிக்கிய 200 இந்தியர்கள்: நாடு திரும்ப ஏற்பாடு

துபாய் : வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், கடந்த ஓராண்டாக, ஊதியம் வழங்கப்படாமல், அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி தவிக்கும் 200 இந்தியர்களுக்கு, விரைவில் ஊதியம் வழங்கி, அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப முயற்சிகள் நடந்து வருவதாக, இந்திய துாதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.


காலாவதி

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், அல் வசிதா எமிரேட்ஸ் என்ற உணவு தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த, 300 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு, கடந்த ஓராண்டாக, இந்த நிறுவனம், ஊதியம் வழங்கவில்லை. 'விசா'வும் காலாவதி ஆகிவிட்டதால், அவர்களால், சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல், அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி அவதிப்பட்டு வந்தனர்.நிலுவை தொகை


இதில், 200 பேர், இந்தியாவை சேர்ந்தவர்கள். அதில் பெரும்பாலானவர்கள், கேரளாவை சேர்ந்தவர்கள். இவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில், இந்திய துாதரக அதிகாரிகள் ஈடுபட்டனர்.அவர்கள் பணியாற்றிய நிறுவனத்துடன் பேசி, அவர்களுக்கு வரவேண்டிய நிலுவை தொகையை பெற்று தந்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணி, அடுத்த வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்ப்பதாக, துாதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
11-செப்-201914:16:59 IST Report Abuse
சுந்தரம் செய்தியின் உண்மையை நம்புவதற்கு சிரமமாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு சம்பளம் வங்கியில் டெபாசிட் செய்ததற்கான வங்கி ஆவணங்களை தொழிலாளர் நல அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும். இரண்டு மாதங்கள் அத்தகைய ஆவணம் வரவில்லை என்றால் அந்த நிர்வாணத்தை கருப்பு பட்டியலில் இணைத்துவிடுவார்கள். எப்படி ஓராண்டாக சம்பளம் கொடுக்கவில்லை என்கிறார்கள்? புரியவில்லை.
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
11-செப்-201917:41:50 IST Report Abuse
சுந்தரம் செய்தியின் உண்மையை நம்புவதற்கு சிரமமாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு சம்பளம் வங்கியில் டெபாசிட் செய்ததற்கான வங்கி ஆவணங்களை தொழிலாளர் நல அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும். இரண்டு மாதங்கள் அத்தகைய ஆவணம் வரவில்லை என்றால் அந்த நிர்வாகத்தை கருப்பு பட்டியலில் இணைத்துவிடுவார்கள். எப்படி ஓராண்டாக சம்பளம் கொடுக்கவில்லை என்கிறார்கள்? புரியவில்லை. மூன்றாவது மாதம் தொழிலாளர் நல அலுவலகத்துக்கு பட்டியல் வராதபோதே அரசாங்கத்துக்கு தகவல் ஆன் லைனில் சென்றுவிடுமே. எப்படி ஓராண்டு வரை அந்த பட்டியல் போகாமல் இருக்க முடியும்?...
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
11-செப்-201918:55:58 IST Report Abuse
கதிரழகன், SSLCமொதல்ல இத்தாண்டா சாக்கு ன்னு பாக்கி பங்களாதேஷி தீவிரவாதி எல்லாம் புகுந்துடுவானுவ. சிரியால யுத்தம் ன்னு அகதிகளை உள்ள விட்டான் ஐரோப்பாவுல. பாக்கிங்க ப்ளேன் புடிச்சு அங்கிட்டு போயி கும்பலோட கலந்து மொதல்ல விசா வாங்கிட்டானுவ . எங்க எவன் ஏமாறுவான் ன்னு காத்துகிட்டு இருக்கானுவ. ஒரு இடுக்கு கெடச்சா போதும் உள்ள நொழஞ்சு அப்புறம் கலகம் தீவிரவாதம் ஷர் ஆ ன்னு கேளம்பிடுவாணுவ. சாக்கிரதை சாக்கிரதை....
Rate this:
Share this comment
Cancel
11-செப்-201913:23:27 IST Report Abuse
Ganesan Madurai சுந்திரம் குவைத் எனக்கு லலித் மோடிய பெயில் பப்பூ லண்டனில் போய் திருட்டுத்தனமா பார்த்து டீல் பேசுனதும் நினைவுக்கு வருது.
Rate this:
Share this comment
Cancel
11-செப்-201913:21:24 IST Report Abuse
Ganesan Madurai திரும்பவும் அங்கேயே தான் போவானுங்க. ஆனா ஓட்டு மட்டும் பெயில் பப்பூவுக்கு, மாட்டிகினா மட்டும் மோதி வேணும் இவனுகளுக்கு.
Rate this:
Share this comment
santhanam - madurai,இந்தியா
11-செப்-201916:34:01 IST Report Abuse
santhanamமோடி என்னத்த செஞ்சாரு. ஈராக்குல பதினெட்டு சீக்கியர்கள் மறைமுகமாக இறந்ததை மறைக்க என்னவெல்லாம் நாடகம் நடத்தினார் என்று எல்லோருக்கும் தெரியும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X