பொது செய்தி

இந்தியா

ராஜஸ்தான் லாரி உரிமையாளருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம்

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (30)
Advertisement
Rajasthan, Truck Owner,Overloading Vehicle, ராஜஸ்தான், லாரி, உரிமையாளர், அபராதம்,

புதுடில்லி: விதிமுறைகளை மதிக்காததற்காகவும், அதிக எடை கொண்ட பொருட்களை ஏற்றி சென்றதற்காகவும் ராஜஸ்தானை சேர்ந்த லாரி உரிமையாளர் ஒருவருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாட்டின் பல மாநிலங்களில், புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், டில்லியில் நடந்த வாகன சோதனையில், ராஜஸ்தானை சேர்ந்த பகவான் ராம் என்பவருக்கு சொந்தமான லாரியை மடக்கி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எடையை ஏற்றி சென்றது, உரிய அனுமதி பெறாதது உள்ளிட்ட காரணங்களுக்காக, பகவான் ராமுக்கு ரூ.1.41,700 அபராதம் விதிக்கப்பட்டது. பகவான் ராம், அபராதத்தை டில்லி கோர்ட்டில் செலுத்தி, லாரியை மீட்டு சென்றார்.

புது சட்டம் அமலுக்கு வந்த பின்னர், அதிக அபராதம் செலுத்திய நபர் இவர் ஆவார். முன்னதாக, ஒடிசாவில் போக்குவரத்து விதிகளை மீறிய லாரி டிரைவருக்கு, மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ், 86 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.




Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-செப்-201920:34:03 IST Report Abuse
Kalyanaraman அபராதம் விதிப்பது அரசின் உரிமை. ஆனால் அதற்குமுன் அரசை நோக்கி ஒரு நியாயமான கேள்வி வந்தாலும் அதற்கு பதில் சொல்லவேண்டியது அரசின் கடமை. இங்கே எந்த அரசும் உரிமை,கடமை இரண்டையும் மதிப்பதில்லை. அப்படி மதிக்காத அரசை மக்கள் மதிக்க வேண்டுமா? என்றுமே அரசியல் சதுரங்கத்தில் மக்கள் பகடைக்காய்கள்தான்.
Rate this:
Share this comment
Cancel
Kumaravel -  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201919:02:40 IST Report Abuse
Kumaravel பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் மோட்டார் வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது.அதேபோல் கட்டுபாடில்லாமல் புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-செப்-201915:08:16 IST Report Abuse
தமிழ்வேல் புதிய வாகன சட்டம், கெடுபிடிகள் தேவை தான். ஆனால், இதனால் விலைவாசி ஏறும். ஒரு லாரியில் சென்றுகொண்டிருந்த படத்தில் உள்ள பொருட்கள் இரண்டு அல்லது மூன்று லாரிகளில் அனுப்ப வேண்டி இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X