அரசியல் செய்தி

தமிழ்நாடு

இபிஎஸ்.,ன் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த ஸ்டாலின்

Added : செப் 11, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement

பரமக்குடி: நீர் மோலாண்மையை ஆய்வு செய்ய உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேல் செல்வதாக முதல்வர் இபிஎஸ் அறிவித்தார். இதனை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார்.இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், நிருபர்களை சந்தித்து பேசுகையில், உள்ளூர் நீரை சேமிக்க முடியாமல் கடலில் கலக்க அனுமதித்து விட்டு இஸ்ரேல் செல்வதா? கொள்ளிடத்தில் 20 ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில் கலப்பது கவலையளிக்கிறது.
தண்ணீரை சேமிக்காமல் வீணாக்கும் பொதுப்பணித்துறை இப்போது புதுப்பணித் துறையாக மாறியுள்ளது. ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது இபிஎஸ் விரைவில் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vetti ver - cheennai,இந்தியா
11-செப்-201916:47:42 IST Report Abuse
vetti ver சுடலை ஒரு காமெடி பீசு. பக்க வாத்தியம் , ஒத்துன்னு ஏதோ கேள்வி பட்டோம் . தேவையா சுடலைக்கு இதெல்லாம் . பொத்திகினு பெனாத்தாம சும்மா குந்தியிருந்தா சான்ஸ் கிடைச்சாலும் கிடைக்கலாம் .
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
11-செப்-201915:25:33 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam தனது சொத்தையை மறைப்பதற்கு, மற்றவைகள் மீது இல்லாத பொல்லாதவற்றைச் சுமத்துவது ஸ்டாலின் என்பவருக்கு வழமையாகிவிட்டது. இனிமேல், இவர் திருந்தவேமாட்டார்.
Rate this:
Cancel
11-செப்-201914:53:44 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா எடப்பாடி பழனிச்சாமி அவர்களை விமரிசிக்கும் தகுதி யாருக்கு இருக்கின்றதோ இல்லையோ, பிரிவினை வாதம் பேசி, ஓட்டுவங்கி அரசியல் நடத்திக்கொண்டு இருக்கும் திருவாரூர் தீய சக்தி சுடலைக்கும் அதன் கட்சி திமுகவிற்கும் இல்லை. ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கும், நீட்டுக்கும், sterlite மற்றும் nutrino வுக்கும் அந்த பக்கம் கையெழுத்தை போட்டுவிட்டு, இந்தப்பக்கம் எனக்கு எதுவும் தெரியாது, தெரியாமல் செய்துவிட்டேன் என்று நாடகம் போட்ட கும்பல் தானே இது? தந்தை மானாட மயிலாடவில் லயித்திருக்கும் வேளையில், தமிழகம் இருளில் தத்தளித்து ஒரு சிறுதொழில் கூட நடக்க வழியில்லாமல் செய்ததும், கனிமொழி தேவியார் ஆவின் பால் நிறுவனத்தை சீரழித்து அதன் ஆதாரங்களை தீயிட்டு கொழுத்தியதும் மறந்து போய் விடுமோ? இல்லை 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் நடித்து, பித்தலாட்டம் செய்து வெளியே வந்தது தான் மறக்குமா? மக்களே இந்து மதத்தை விரோதித்து, தவறாக விமர்சித்து மற்ற இரு மதங்களையும் அரவணைப்பது போல் நடித்து வாழும் இந்த பகட்டு கூட்டம், தமிழர்களையும், தமிழகத்தையும் தன் சொந்த விருப்பு, வெறுப்பு மற்றும் குடும்ப நலனுக்காக, பதவிக்காக விற்றுவிடுமேயன்றி முன்னேறவும், உருப்படவும் விடாது. நாட்டுப்பற்றாவது கொஞ்சமாவது இருக்குமா என்றால் அதுவும் மருந்துக்கும் இல்லை இந்த கூட்டத்திடம். தமிழகத்துக்கு இன்றைய தேவை தகுதியும், திறனும், மத நிலைப்பாடுகளை கடந்த ஓர் இளம் தலைமை. இதுபோன்ற அல்லக்கைகளை ஓரம் கட்டினாலே அவர்கள் தானாக வெளிவருவார்கள். வேண்டாம் திமுக, வேண்டாம் அதிமுக, வேண்டாம் காங்கிரஸ் மற்றும் பிஜேபி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X