அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி: 220 மாணவ, மாணவியர் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி: 220 மாணவ, மாணவியர் பங்கேற்பு

Added : செப் 11, 2019
Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி நடந்த சைக்கிள் போட்டியில், 220 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
மறைந்த தமிழக முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது. இதே போல், இந்த ஆண்டிற்கான சைக்கிள் போட்டி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று காலை நடந்தது. போட்டிகளை ஆர்.டி.ஓ., தெய்வநாயகி துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர் தலைமை வகித்தார். 13 வயது பிரிவினருக்கு, 10 கி.மீ., தூரமும், 15 வயது பிரிவினருக்கு, 15 கி.மீ., 17 வயது பிரிவினருக்கு, 20 கி.மீ., தூரமும் போட்டி நடத்தப்பட்டது. இதில், 120 மாணவியர், 100 மாணவர்கள் என மொத்தம், 220 பேர் பங்கேற்றனர். இதில், 13 வயது பிரிவில், கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் தட்சணாமூர்த்தி, கிருஷ்ணகிரி புனிதஅன்னாள் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேணுகா முதலிடம் பெற்றனர். 15 வயது பிரிவில், கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் தனசேகர், மாணவி சத்யா, 17 வயது பிரிவில், குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கலைச்செல்வம், காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சங்கீதா ஆகியோர் முதலிடம் பெற்றனர். அவர்களுக்கு, ஆர்.டி.ஓ.,. பரிசு வழங்கி பாராட்டினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X