பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : செப் 11, 2019
Advertisement

போக்குவரத்து நெரிசலால் தொல்லை: கரூர் அருகே, காமராஜபுரத்தில் ஜவுளி உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இதனால், காலை, மாலை நேரங்களில் வேன் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளது. அப்போது, இப்பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி வாகனங்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் தாமதமாக செல்ல வேண்டி உள்ளது.

- கே.பி.மோகன், கரூர்.

கழிவுநீர் வடிகால் வசதி தேவை: கரூர் அருகே, வெள்ளியணை பகுதியில், 350க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல போதிய சாக்கடை வசதி இல்லை. ஏற்கனவே உள்ள கால்வாய்களில் மண் குவிந்து தூர்ந்து போன நிலையில் உள்ளது. இதனால், சாலையில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில், கொசு உற்பத்தி அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. சாக்கடையை தூர்வாருவதோடு, புதிதாக கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

- எஸ்.அப்புசாமி, வெள்ளியணை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X