பொது செய்தி

தமிழ்நாடு

அள்ளிக்கொடுக்குது பொங்கல் லீவு

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (36)
Advertisement
Pongal, Holiday, பொங்கல், விடுமுறை

சென்னை: புதிய வருடம் தொடங்கி விட்டால் அனைவரும் விடுமுறை தினங்களை தேடுவது வழக்கம். அதிலும் ஜனவரி மாதத்தில் விடுமுறைக்கு பஞ்சம் இருக்காது. ஆங்கில வருடப்பிறப்பு, பொங்கல் பண்டிகைகள், குடியரசு தினம் என அரசு விடுமுறைகள் அதிகம். அடுத்த வருட (2020) பொங்கல் பண்டிகை, தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.




அதாவது, ஜன., 11, 12 நாட்கள் வார விடுமுறையாகவும், ஜன., 13 (திங்கள் கிழமை) மட்டும் விடுப்பு எடுத்தால், ஜன., 14 முதல் 17 (வெள்ளி கிழமை) வரை போகி பண்டிகை, பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது.

தொடர்ந்து மீண்டும் வார விடுமுறை வருகிறது. ஜன., 13 மட்டும் விடுப்பு எடுக்கும்பட்சத்தில் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறையை பொங்கல் பண்டிகை அள்ளிக் கொடுக்க தயாராக இருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
18-செப்-201903:59:35 IST Report Abuse
meenakshisundaram முன்பு ரத்னவேல் பாண்டியன் அவர்கள் நிதி கமிஷன் தலைவராக இருந்த போது சமர்ப்பித்த அறிக்கையில் அரசு ஊழியர்களின் சம்பள விகிதம் தாறுமாறாக உயர்த்தப்பட்டு விடுமுறை மாத்திரம் மூன்றே நாட்கள் என்று அறிவுறுத்தப்பட்டது (America போல) அங்கே மூன்றே விடுமுறை நாட்கள்தான் இன்றும். தேவைப்பட்ட மத விஷயங்களுக்கு ஊழியர்களின் casual எண்ணிக்கை கூட்டப்பட்டது -அதாவது ரம்ஜான் க்கு ஹிந்துக்களும் கிறிஸ்துவர்களும் ஏன் விடுமுறை அனுபவிக்க வேண்டும்?அரசு வேலை ஏன் பாதிக்கப்பட வேண்டும் ?அதே போல Krishna ஜெயந்தி என்றால் ஹிந்துக்கள் மாத்திரம் விடுமுறை எடுத்தால் போதுமே என்ற எண்ணமே காரணம்.இதனால் வேலையும் நிற்காது என்பதே குறிக்கோள்.அப்போது அவ்வளவு சம்பள உயர்வு கொடுத்து விட்டு இந்த மாதிரி விடுமுறையை மாற்றி இருந்தால் நிலைமை நன்றாக இருந்திருக்கும், அதை காங் அரசு செய்யதவறியது.இந்த நிலைமையினாலேயே இப்போ வங்கிஊழியர்களும் நான்கு நாட்கள் வேலை நிறுத்தம் செய்யவும் ஒரு காரணம்.
Rate this:
Share this comment
Cancel
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
17-செப்-201919:56:05 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao ஒரு மிகப் பெரிய விபத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். எனக்குத் தெரிந்து மும்பை கல்கத்தா ஆகிய இரு நகரங்களில் இருவேறு நேரங்களில் நடந்தது இது. தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை. வீட்டுக்குப் போகும் அவசரத்தில் ஒரு பெண் கஸ்டமரை லாக்கர் இருட்டறையிலியே வைத்துப் பூட்டி விட்டு சென்று விட்டனர். நான்கு நாட்கள் கழித்து லாக்கர் முறையைத் திறந்தால் அரை மயக்க நிலையில் கிடந்தாள். நீண்ட நாட்கள் விடுமுறை விடும்போது தகுந்த முன் எச்சரிக்கைகள் அவசியம். வேலை செய்ய விருப்பம் உள்ளவர்களை வேலை செய்ய விட்டு விட்டு சம்பளத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
17-செப்-201918:44:14 IST Report Abuse
karutthu ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த பொழுது இப்படித்தான் ஜனவரி மாதத்தில் அதிக பட்ச விடுமுறை வந்தது பொது நலன் கருதி அரசு விடுமுறைகளை வங்கி விடுமுறைகளையும குறைத்தார் இவர்களுக்கு இவ்வளவு நாட்கள் விடுமுறை தேவையில்லை மக்கள் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X