சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவிரி வெள்ளத்தில் அடித்து சென்ற நான்கு பேர் மீட்பு

Added : செப் 11, 2019
Share
Advertisement
ப.வேலூர்: ப.வேலூரில், காவிரி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நான்கு பேர் மீட்கப்பட்டனர். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் கனகராஜ், 60. இவர், நேற்று மாலை, 5:30 மணியளவில் ப.வேலூர் காவிரிக்கரையில், தனது உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்றார். பின்னர், ஆற்றில் ஆழமான பகுதியில் குளிக்க சென்றுள்ளார். தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால், அடித்து

ப.வேலூர்: ப.வேலூரில், காவிரி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நான்கு பேர் மீட்கப்பட்டனர். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் கனகராஜ், 60. இவர், நேற்று மாலை, 5:30 மணியளவில் ப.வேலூர் காவிரிக்கரையில், தனது உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்றார். பின்னர், ஆற்றில் ஆழமான பகுதியில் குளிக்க சென்றுள்ளார். தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால், அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்த நாமக்கல் இளைஞர்கள் தேவா, நக்கீரன், சூர்ய பிரகாஷ் ஆகியோர், கனகராஜை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், காப்பாற்ற சென்ற மூவரும் அடித்து செல்லப்பட்டனர். அங்கிருந்தவர்கள், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு படை வீரர்கள், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முதியவர் உட்பட நான்கு பேரையும் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், பத்திரமாக மீட்டனர். நான்கு பேரும், ப.வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X