பொது செய்தி

இந்தியா

அபராதம் குறைப்பு: மாநில அரசுகள் முடிவு

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (42)
Advertisement
போக்குவரத்து விதிமீறல், நிதின்கட்காரி, அபராதம்,

புதுடில்லி: போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை குறைப்பது குறித்து, மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் வசூலிக்கப்படுகிறது. டில்லியில், லாரி உரிமையாளருக்கு ரூ.1.41 லட்சமும், ஒடிசாவில் லாரி டிரைவருக்கு 70 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிக அபராதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருவர் ஜீப்பை தீவைத்து எரித்தார். மோட்டார் வாகன சட்டங்களுக்கான அபராதத்தை குஜராத் மாநில அரசு, 50 சதவீதம் குறைத்துள்ளது.






இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை குறைப்பது குறித்து, மாநில அரசுகள் முடிவு செய்யலாம். விபத்துகளில் இருந்து காப்பதற்காக தான் அபராதம் வசூலிக்கப்படுகிறதே தவிர, அரசின் வருமானத்தை பெருக்க அல்ல. விபத்துகளில், இளைஞர்கள் தான் அதிகளவில் உயிரிழக்கின்றனர். அபராதம் மூலம் கிடைக்கும்,வருமானம் மாநில அரசுகளுக்கு தான் செல்லுமே தவிர, மத்திய அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
11-செப்-201923:57:21 IST Report Abuse
orange mittai புஸ்ஸ்ன்னு ஆகிட்டாரே.....
Rate this:
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
11-செப்-201922:25:26 IST Report Abuse
Vaduvooraan ஏற்கனவே தமிழ்நாடு ஒரு மாதிரி..கடாரம் கொண்டவர்கள்..கனகவிசயர் தலையில் கல் சுமக்க வைத்தவர்கள்..இமயத்தில் புலிக்கொடியை பறக்கவிட்டவர்கள் என்று பழம் பெருமையில் திளைத்துக் கொண்டு காலம் தள்ளுபவர்கள். இதில் மத்திய அரசு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் சும்மா விடுவோமா? போர்ப்பரணி பாடிக் கொண்டு சிலிர்த்துக் கொண்டு கிளம்பிர மாட்டோமா? எல்லாத்தையும் அரசியல் கண்ணோட்டத்துலதான் பார்த்துதலையில மண்ண வாரி போட்டுக்குவோம். நாங்க தமிலர்கள் இல்லியா?
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
11-செப்-201922:04:56 IST Report Abuse
konanki மூர்க்கத்தனமாக எல்லாவற்றையும் எதிர்க்கும் கூட்டம். சட்டத்தை மீறுபவர்கள் மீது தான் இந்த கடுமையான நடவடிக்கை. இதில் பாதிப்பு சட்டத்திற்கு முரணாக நடக்கும கூட்டத்திற்கு தான். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சட்டத்தை மீறுவது தான் இந்த எதிர்ப்பு க்கான காரணம். ஆனால் இதே கும்பல் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் அரசு தான் காரணம் என்று குறை சொல்லி சுய ஒழுக்கம் இன்றி திரியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X