அபராதம் குறைப்பு: மாநில அரசுகள் முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அபராதம் குறைப்பு: மாநில அரசுகள் முடிவு

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (42)
Share
போக்குவரத்து விதிமீறல், நிதின்கட்காரி, அபராதம்,

புதுடில்லி: போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை குறைப்பது குறித்து, மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் வசூலிக்கப்படுகிறது. டில்லியில், லாரி உரிமையாளருக்கு ரூ.1.41 லட்சமும், ஒடிசாவில் லாரி டிரைவருக்கு 70 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிக அபராதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருவர் ஜீப்பை தீவைத்து எரித்தார். மோட்டார் வாகன சட்டங்களுக்கான அபராதத்தை குஜராத் மாநில அரசு, 50 சதவீதம் குறைத்துள்ளது.


latest tamil news




இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை குறைப்பது குறித்து, மாநில அரசுகள் முடிவு செய்யலாம். விபத்துகளில் இருந்து காப்பதற்காக தான் அபராதம் வசூலிக்கப்படுகிறதே தவிர, அரசின் வருமானத்தை பெருக்க அல்ல. விபத்துகளில், இளைஞர்கள் தான் அதிகளவில் உயிரிழக்கின்றனர். அபராதம் மூலம் கிடைக்கும்,வருமானம் மாநில அரசுகளுக்கு தான் செல்லுமே தவிர, மத்திய அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X