பொது செய்தி

இந்தியா

பாக்.,க்கு இலங்கை அமைச்சர் பதிலடி

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி : இந்தியா மிரட்டியதால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள், பாக்., தொடரில் பங்கேற்க மறுப்பு தெரிவிப்பதாக பாக்., அமைச்சர் பவத் ஹூசைன் சவுத்ரி கூறியதை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.



latest tamil news


பாக்.,ல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாக்., அமைச்சர் பவத் ஹூசைன், இந்தியா அழுத்தம் கொடுத்து, மிரட்டியதாலேயே இலங்கை வீரர்கள், பாக்., சுற்றுபயணத்தை தவிர்த்துள்ளதாக குற்றம்சாட்டினார். இதனை மறுத்து டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் இலங்கை விளயைாட்டு அமைச்சர் ஹரன்.


latest tamil news



அவர் வெளியிட்டுள்ள டுவீட்டில், 2009 ம் ஆண்டு பாக்., சுற்றுபயணத்தின் போது வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 8 வீரர்கள் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை மனதில் வைத்து, பாதுகாப்பு கருதியே இலங்கை வீரர்கள் பாக்., பயணத்தை தவிர்த்துள்ளனர். இதில் இந்தியாவின் மிரட்டல் இருப்பதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது. இருந்தும் பாக்., செல்ல தயாராக உள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாக்.,ஐ அவர்கள் மண்ணில் வீழ்த்தும் முழு பலத்துடன் எங்கள் அணி உள்ளது என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
13-செப்-201906:07:16 IST Report Abuse
Ray தீவிரவாத தாக்குதல் நடந்ததா இல்லையா? இதுக்கு என்ன சொல்லப் போறாரு பாக்கு அமைச்சர்ர்ர்ர்ர்
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
11-செப்-201919:20:10 IST Report Abuse
Nallavan Nallavan பதிலடி ஒண்ணும் காட்டமா இல்லையே ??
Rate this:
Cancel
11-செப்-201918:45:58 IST Report Abuse
நக்கல் வழக்கமா பணம் அதிகம் கொடுத்தால் சிலர் பாக்கிஸ்தான் மாதிரி பயங்கரவாதிகள் இருக்கற இடத்துக்கு போய் ஆடுவாங்க... ஆனால், பக்கிகளால் பணம் பெருசா கொடுக்க முடியாது என்கிறபோது இலங்கை அனுப்பும் வீரர்கள் பலிகடாவாகத்தான் பார்க்கப்படுவார்கள்.. இதில் இலங்கைக்கு என்ன லாபம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X