எண்ணெய் வாங்காவிட்டால் என்ன செய்வது: ஈரான் கேள்வி

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (31)
Advertisement

டெஹ்ரான்: எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தினால் இரு நாட்டிற்கு இடையிலான உறவு பாதிக்கும் என இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.






அமெரிக்கா விதித்த பொருளாதார தடை காரணமாக ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது இந்தியா. இது தொடர்பாக இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி கூறியதாவது:
ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகாரப்பூர்வமாக நிறுத்தியது. இதற்கு காரணமாக தேசத்தின் நலன் என கூறுகின்றனர். ஆனால் இவ்வாறு செய்ததால் எங்களால் (ஈரான்) இந்தியாவிடம் இருந்து எந்த வர்த்தகமும் செய்ய முடியவில்லை.





எண்ணெய் இறக்குமதியில் கிடைக்கும் தொகையில் தான் இந்தியாவில் வர்த்தகம் செய்கிறோம். அதையும் நிறுத்தினால் இந்தியாவிடம் இருந்து எப்படி பொருள் வாங்க முடியும். அமெரிக்கா எங்கள் நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தாலும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகின்றன. இவர்களை போல் இந்தியாவும் தேச நலனுக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டும்.
அமெரிக்கா விதித்துள்ள தடையை இந்தியா ஆதரிக்கக் கூடாது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் சபாஹர் துறைமுகத் திட்டம் மற்றும் வர்த்தகத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும். இவ்வாறு அலி செகேனி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
17-செப்-201902:13:50 IST Report Abuse
ashak அமெரிக்க அடிமை, இந்தியா சுயமாக எதையும் செய்ய முடியாது
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
12-செப்-201903:07:31 IST Report Abuse
 nicolethomson இவர் மிரட்டல் தொனியில் பேசுவது தான் வேதனை தருது யோசிக்க வைக்குது
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
12-செப்-201902:00:18 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) எல்லோரும் மின்சார வாகனங்கள் மற்றும் மின்சார அடுப்புகளுக்கு மாறுங்கள். இந்த பிரச்சினையே இல்லை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X