பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் போன் இயக்கம்: பள்ளிகள் திறப்பு

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (6)
Advertisement

ஜம்மு: காஷ்மீரில் அனைத்து தொலைபேசி சேவைகளும் சீரடைந்துள்ளன. பள்ளிகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளன.






ஆக.,5 ம் தேதி காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை அடுத்து, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க 144 தடை பிறப்பிக்கப்பட்டது. மொபைல் சேவை, இன்டர்நெட் சேவைகளும் முடக்கப்பட்டது. தற்போது காஷ்மீரில் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்பி வருவதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன. இன்று காஷ்மீர் முழுவதும் தொலைபேசி சேவை சீரானது.





துவக்க, ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் இயங்க துவங்கின. 75 சதவீதம் ஆசிரியர்கள் வருகை இருந்த போதிலும் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது. அனைத்து வங்கிகள், ஏடிஎம்.,கள் செயல்படுகின்றன. இ டெண்டர், ஸ்காலர்ஷிப் படிவங்கள், வேலைக்கான விண்ணப்பங்கள் அனுப்புவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சமாக 5 முனையங்கள் அமைக்கப்பட்டு, இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

370 பிரிவு நீக்கப்பட்ட பிறகு இளைஞர்கள் யாரும் பயங்கரவாத அமைப்புக்களில் சேர்ந்ததாக எந்த தகவலும் இல்லை. கடந்த காலங்களில் தவறான வழிநடத்தல் காரணமாக கோபத்தில் பயங்கரவாத அமைப்புக்களில் இணைந்த இளைஞர்கள் பலர் மீட்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201920:33:28 IST Report Abuse
sekar ng சென்னையில் ஏனோ எஸ்பிஐ பேங்க் ஏடிஎம் பல இடங்களில் முடங்கியுள்ளது. யாரும் கேட்பாரில்லை.
Rate this:
Share this comment
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201920:31:43 IST Report Abuse
sekar ng வைகோவை காணவில்லை. உடனே இவரை காஷ்மீருக்கு அழைத்து சென்று பார்வையிட கோர்ட் அனுமதிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201920:22:59 IST Report Abuse
sekar ng வை.கோபாலசாமி நாயுடு காரு ஏன் சந்திரபாபு நாயுடு வீட்டுகாவலை எதிர்த்து வழக்கு தொடரவில்லை. காஷ்மீர் செல்வந்தர் பணம் கொடுத்ததாலா சேக்கப்துல்லா மகனை தேடுகிறீர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X