பொது செய்தி

இந்தியா

2.1 கி.மீ., இல்லை! 400 மீட்டரில் சிக்னலை இழந்த விக்ரம் லேண்டர்

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (18)
Advertisement

புதுடில்லி: சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், 2.1 கி.மீ., தூரத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் 400 மீட்டரில் தான் சிக்னல் துண்டிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.


நிலவின் தென்முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ., தூரத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டதாகவும், விக்ரம் லேண்டரிடம் தொடர்பை பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக விஞ்ஞானிகள் கூறினர். இந்நிலையில், நிலவின் மேற்பரப்பிற்கு 400 மீட்டர் தொலைவில் தான் சிக்னல் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஏன் இந்த குழப்பம்

நிலவை நெருங்கும் விக்ரம் லேண்டர் குறித்த கிராப் புகைப்படத்தின் மூலம் இந்த குழப்பம் தெளிவாகியுள்ளது.

அதனை விளக்கும் விதமாக மேலுள்ள புகைப்படத்தில் நடுவில் உள்ள சிவப்பு மஞ்சள் கோடுகள் விக்ரம் லேண்டரின் நிலையை காட்டுகிறது. அதில் சிவப்பு கோடு, திட்டமிடப்பட்ட இலக்காகவும், பச்சை கோடு, விக்ரம் லேண்டரின் நிலையையும் தெளிவுப்படுத்தியது.

இரண்டு கோடுகளை ஆய்வு செய்ததில் சிவப்பு கோட்டின் மிக அருகில் தான் பச்சை கோட்டின் நிலை மாறி இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதாவது திட்டமிடப்பட்ட பாதையில் இருந்து கிட்டத்தட்ட 400மீ., தொலைவில் தான் தொடர்பு துண்டிக்கப்பட்டு பாதை மாறியதாக தெரிய வந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-செப்-201920:32:14 IST Report Abuse
Niranjan அடுத்த முறை இது போன்ற நிகழ்வு சமயத்தில் VVIP கள் இஸ்ரோ கண்காணிப்பு நிலையத்திற்கு செல்லாமல் இருந்தால், இஸ்ரோ மேல் அதிகாரிகளுக்கு அவர்கள் வேலையில் முழு கவனம் செலுத்த முடியும். தயவு செய்து இந்த கருத்துக்கு அரசியல் மற்றும் மத சாயம் பூசாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
12-செப்-201907:51:58 IST Report Abuse
ஆப்பு மூணு அடியிலிருந்து கீழே விழுந்தாலும் சேதாரம்தான். அதுவும் தலைகுப்புற விழுந்தா அவ்ளோதான்.
Rate this:
Share this comment
Cancel
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
12-செப்-201900:47:24 IST Report Abuse
Kunjumani நான் பார்த்தவரை நிலவின் மிக அருகில் லேண்டர் சென்ற பொழுதும் vertical Velocity 49 m / s இல் இருந்து குறையவில்லை அதனால் soft breaking பொழுது vertical Velocity குறைக்க பயன்படும் நான்கு உந்து விசை என்ஜின்களின் ஒன்று சரியாக எரிபொருளை உபயோகபடுத்த தவறியிருக்கலாம், அதனால் vertical Velocity குறையாது போயிருக்கலாம், டெலிமீட்டரில் லேண்டர் rotate ஆனது போன்ற கிராபிக்ஸ் லேண்டர் சென்சார்களில் இருந்து பெறப்பட்ட data அடிப்படையில் render செய்யப்பட்டது. லேண்டர் orientation மாறியதால் லேண்டர் ஆண்டெனா இஸ்ரோ கட்டுப்பட்டு அறையுடன் alignmentil இல்லை அதனாலேயே தகவல் பரிமாற்றம் இல்லை என்றே நினைக்க தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X