பொது செய்தி

தமிழ்நாடு

செப்.,13ல் சென்னை வருகிறது நடராஜர் சிலை

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து மீட்கப்பட்ட, நடராஜர் சிலை, செப்.13ல் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது.நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் அறம்வளர்த்த நாயகி கோயிலில் 1982ம் ஆண்டில் நடராஜர் , சிவகாமி உள்ளிட்ட 4 சிலைகள் மாயமாகியுள்ளன. இவைகளில், நடராஜர் சிலை, 37 ஆண்டுகளுக்கு முன் மாயமானது. 700 ஆண்டுகள் பழமையான இந்த பஞ்சலோக

சென்னை: தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து மீட்கப்பட்ட, நடராஜர் சிலை, செப்.13ல் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது.latest tamil newsநெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் அறம்வளர்த்த நாயகி கோயிலில் 1982ம் ஆண்டில் நடராஜர் , சிவகாமி உள்ளிட்ட 4 சிலைகள் மாயமாகியுள்ளன. இவைகளில், நடராஜர் சிலை, 37 ஆண்டுகளுக்கு முன் மாயமானது. 700 ஆண்டுகள் பழமையான இந்த பஞ்சலோக நடராஜர் சிலையின் தற்போதைய மதிப்பு ரூ 30 கோடி என தெரிகிறது. தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதை சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்தனர்.


latest tamil news
மீட்கப்பட்டது எப்படி?


தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகம் (Art Gallery of South Australia) 2001ம் ஆண்டில், 75.7 செ.மீ., உயரமுள்ள நடராஜர் சிலையை ஓலிவர் போர்ஜ் அன்ட் பெரன்டன் லிங்க் நிறுவனத்திடம் வாங்கியிருந்தது. தமிழகத்திற்கு சொந்தமான இந்த சிலையை மீட்க சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன். மாணிக்க வேல் தலைமையில் முயற்சி எடுக்கப்பட்டது. இந்த சிலை தமிழகத்தை சேர்ந்தது என்றும் இது குறித்து உரிய ஆவணங்களை ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழக காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

இதையடுத்து இந்த நடராஜர் சிலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க ஏ.ஜி.எஸ்.ஏ., நிறுவனம் முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக இந்த சிலை இன்னும் ஓரிரு நாளில் டில்லிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் டில்லி கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை, விரைவு ரயில் மூலம் செப்.,13ல் சென்னை கொணடு வரப்பட உள்ளதாக பொன்.மாணிக்கவேல் தகவல் அளித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-செப்-201908:23:18 IST Report Abuse
கண்ணோட்டம் பொது வாழ்வில் ஒரு மனிதனின் நேர்மை அவர் முகம் அறியாதவர்களை எல்லாம் எப்படி எப்படியோ மனதார வாழ்த்தச் செய்கிறது! நாட்டை கொள்ளை அடித்து, ஊழல் செய்து பல்லாயிரம் கோடி வைத்திருப்போருக்கு இது போன்ற ஒரு வாழ்த்து கிடைத்திடுமா? திரு. பொன் மாணிக்கவேல் அவர்களே நீங்கள் மனிதருள் உண்மையான மாணிக்கம்!
Rate this:
Cancel
Common man -  ( Posted via: Dinamalar Android App )
12-செப்-201908:08:29 IST Report Abuse
Common man Best salute to you from a common man Sir.
Rate this:
Cancel
Kumar Iyer - Chennai,இந்தியா
12-செப்-201907:29:21 IST Report Abuse
Kumar Iyer கல்லிடை வாழ் நமது ஹிந்து சொந்தங்களுக்கு ஒரு வேண்டுகோள். நமது ஊர் அறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீ குலசேகரமுடையர் கோயிலுக்கு சொந்தமான நடராஜர் சிலை ஐயா திரு பொன்மணிக்கவேல் அவர்களின் அயராத முயற்சியாலும் உழைப்பாலும் ஆஸ்திரேலியாவிலிருந்து நாளை Chennai வருகிறது.. நமது கல்லிடை சகோதரர்கள் அனைவரும் விமான நிலையத்தில் அன்னாருக்கு சிறப்பான வரவேற்ட்பு கொடுக்க வரும்படி கேட்டு கொள்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X