புதுடில்லி: புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அதிகளவு அபராதம் விதிக்கப்படுவதை கண்டித்து, டில்லியில், நிதின் கட்கரியின் வீட்டு முன், காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மோட்டார் வாகன புதிய சட்டம் நாடு முழுவதும் செப்.,1ல் அறிமுகப்படுத்தப்பட்டது. வாகன விதிகளை மீறுபவர்களிடம் கடும் அபராதம் விதிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட இச்சட்டத்தை, தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. குஜராத்தில், அபராதத்தொகையை 50 சதவீதத்திற்கும் மேலாக குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை குறைப்பது குறித்து, மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என நிதின் கட்கரி கூறியிருந்தார்.

இந்நிலையில் அதிக அளவு அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் உள்ள சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியின் வீட்டு முன்பு இளைஞர் காங்., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பதட்டம் நிலவியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE