சாலை விபத்தில் இளம்பெண் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் இளம்பெண் பலி

Added : செப் 11, 2019
Share
பைக், பயிற்சி,பெண் , கட்டுப்பாட்டை, இழந்த,ஆக்சிலேட்டர், பலி

சென்னை : சென்னை குன்றத்தூரில் நண்பருடன் மோட்டார் சைக்கிள் பழகிய இளம் பெண் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த குன்றத்தூரில் வசிப்பவர் அபிநயா. இவர் ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இந்நிலையில் அவரது நண்பரான அண்ணாமலையிடம் தனக்கு பைக் ஓட்ட கற்று கொடுக்கும்படி கூறியுள்ளார். அண்ணாமலையும் இவருக்கு பைக் ஓட்ட பயிற்சி கொடுத்துள்ளார். ஆர்வக் கோளாறால், வேகமாக ஆக்சிலேட்டரை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் அபிநயா உயிரிழந்தார். அவரது நண்பரான அண்ணாமலை பலத்த காயமடைந்தார். அவருக்கு குரோம்பேட்டை மருத்துவமனையில் தீவீர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X