சிதம்பரத்தின் ஜாமின் மனு; நாளை விசாரணை

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம், டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு, நாளை( செப்.,12) விசாரணைக்கு வருகிறது.



latest tamil news



மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெறுவதற்கு காங்., தலையிலான ஆட்சியில் 2007ல் அனுமதி அளிக்கப்பட்டது. காங். மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் தலையீட்டால் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இதனையடுத்து, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை, செப்.,19 வரை திகார் சிறையில் அடைக்க டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. சிதம்பரம், திகார் சிறையில் தனியறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


latest tamil news



இந்நிலையில், ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், டில்லி ஐகோர்ட்டில் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமின் மனு, நாளை விசாரணைக்கு வருகிறது. மேலும், சி.பி.ஐ., வழக்கில், கீழமை நீதிமன்றம் விதித்த நீதிமன்ற காவலை எதிர்த்த மனுவும், நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

முன்னதாக, ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'பொருளாதார குற்றங்கள், நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடியவை. அதனால் இந்த வழக்கை வித்தியாசமான முறையில் கையாள வேண்டும். முன்ஜாமின் வழங்குவதற்கு இது உகந்த வழக்கல்ல' என கூறி, ஜாமின் தர மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-செப்-201912:56:10 IST Report Abuse
இந்தியன் kumar உண்மையை ஒத்துக்கொண்டால் ஜாமீன் கிடைக்கும். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருக்கிறார்.
Rate this:
Cancel
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
11-செப்-201923:51:36 IST Report Abuse
orange mittai தல வெளிய வந்திரும் போல....Start மியூசிக்
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
11-செப்-201923:01:26 IST Report Abuse
வல்வில் ஓரி தெண்டகோன் நீதிபதியா இருந்தா மட்டும் தான் ஜாமின் கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X