பிரிட்டனில் 'விசா' சலுகை; இந்திய மாணவர்கள் மகிழ்ச்சி

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
லண்டன்: 'பிரிட்டனில் கல்வி பயிலும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும், தங்கள் படிப்பு முடிந்த பின், இரண்டு ஆண்டுகள் பணியில் ஈடுபட, 'விசா' வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், படிப்பு முடிந்து பட்டம் பெற்றதும், இரண்டு ஆண்டுகள் பணியில் ஈடுபட, பணி விசா வழங்கப்பட்டு வந்தது. கடந்த, 2012ல்,

லண்டன்: 'பிரிட்டனில் கல்வி பயிலும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும், தங்கள் படிப்பு முடிந்த பின், இரண்டு ஆண்டுகள் பணியில் ஈடுபட, 'விசா' வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.latest tamil newsஐரோப்பிய நாடான பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், படிப்பு முடிந்து பட்டம் பெற்றதும், இரண்டு ஆண்டுகள் பணியில் ஈடுபட, பணி விசா வழங்கப்பட்டு வந்தது. கடந்த, 2012ல், பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற தெரசா மே, அந்த நடைமுறையை ரத்து செய்து, நான்கு மாதங்களுக்கு மட்டுமே பணி விசா வழங்கப்படும் என, அறிவித்தார்.

இதனால், பிரிட்டனில் கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக, சமீபத்தில் பொறுப்பேற்ற, போரிஸ் ஜான்சன், இது குறித்து ஆய்வு செய்து, அதில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.


latest tamil newsஅடுத்த ஆண்டு முதல், கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, பட்டம் பெற்றதும், முன்பு போல், இரண்டு ஆண்டுகள் பணி விசா வழங்கப்படும்' என, பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு, பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. பிரிட்டனில் பயிலும் இந்திய மாணவர்களும், பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
12-செப்-201910:41:58 IST Report Abuse
RM One of my relative family one man entered UK in the name of marriage,dependent visa after coming here harassed the girl and cheated changed the visa and absconded. He is living in Uk ,while the girls life is ruined. while people are suffering to get a visa his family planned this way and did. Every where complaint sent even to commissioner Chennai. It is still pending even Chennai Local police helped him to escape, even his passport revoked.So people should be careful when marry with India family from abroad. After seeing abroad life and money there is a chance to escape .Girls family is really victim ,never get a chance to get justice. His family in India enjoying now.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
12-செப்-201905:13:57 IST Report Abuse
 Muruga Vel பல் கலை கழகங்களை நடத்துவதற்கு மாணவர்கள் தரும் கட்டணம் தேவை … சுய லாபத்துக்காக செய்திருக்கிறார்கள் ..மாணவர்களும் இரண்டு ஆண்டு தங்கி வேலை பார்த்து படிப்புக்கு செலவிட்டதை சம்பாதிக்கலாம் … பிரிட்டனில் மோசமான பொருளாதார சூழல் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X