இரட்டை கோபுர தாக்குதல்; அமெரிக்க மக்கள் அஞ்சலி

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (5)
Advertisement

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், அல் - குவைதா பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை கோபுர தாக்குதலின், 18ம் ஆண்டு நினைவு தினம், இன்று(செப்.,11) அனுசரிக்கப்பட்டது.






பயங்கரவாதத்தின் கோர தாண்டவத்தை, 18 ஆண்டுகளுக்கு முன், உலகம் உணர்ந்தது. அப்போது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கம்பீரமாக இருந்த இரட்டை கோபுரங்கள், அல்- - குவைதா பயங்கரவாதிகளால், 2001, செப்., 11ல், தரைமட்டமாக்கப்பட்டன. இதில், 2,500க்கும் அதிகமானோர் இறந்தனர். இந்த தாக்குதலின், 18ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், தாக்குதல் நடத்த இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.







Advertisement






பாக்., பயங்கரவாதிக்கு தடை:

இரட்டை கோபுர தாக்குதலின், 18வது நினைவு தினமான இன்று, பயங்கரவாதத்தை அடியோடு ஒடுக்க, டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.








இதுபற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பயங்கரவாதத்தை ஒடுக்குவதில், டிரம்ப் அரசு உறுதியாக உள்ளது. 11 பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த, 22 பயங்கரவாதிகளுக்கு, அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதில், பாகிஸ்தானிலிருந்து செயல்படும், டி.டி.பி., எனப்படும், டெஹ்ரிக் - இ - தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நுார் வாலியும் ஒருவர்.








இவர் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். டி.டி.பி., அமைப்பின் தலைவராக இருந்த முல்லா பஜுல்லா, கடந்த ஆண்டு, ஜூனில் இறந்தார். இதையடுத்து, இந்த அமைப்பின் தலைவராக, வாலி பொறுப்பேற்றார். நுார் வாலி தலைமையில், டி.டி.பி., அமைப்பு, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில், பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதனால் தான், நுார் வாலியை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-செப்-201909:11:33 IST Report Abuse
நக்கல் பக்கிகளை அமெரிக்காவும் சீனாவும் ஆதரிக்கும் வரை இந்த மாதிரி இரங்கல் கூட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது... பக்கிகள் முழுவதுமாக அடங்க ஒரே வழி அமெரிக்காவிலும், சீனாவிலும் பக்கிகளால் ஆதரிக்கப்படும் தீவிரவாதிகளால் இரண்டு பெரிய தாக்குதல் நடப்பதன் மூலம்தான்... அது நடக்கும், அது நடக்கும் வரை இவர்கள் ஆதரவு தொடரும்...
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-செப்-201903:53:42 IST Report Abuse
J.V. Iyer இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலையவேண்டாம். இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல் - குவைதா பயங்கரவாதிகள் தலைவன் ஒசாமா எங்கே ஒளிந்துகொண்டிருந்தான்? உலகத்தில் உள்ள எல்லா பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாக்கிஸ்தான் பயங்கர நாடு என்று அறிவியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-செப்-201922:26:53 IST Report Abuse
Thiagu கோமாளிகள், தீவிரவாதிகளின் பிறப்பிடமான பாகிஸ்தானுக்கு உதவி செய்யும் நீங்கள்...
Rate this:
Share this comment
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
11-செப்-201923:48:46 IST Report Abuse
orange mittai'பச்சை' குழந்தையை கிள்ளுவதும் நாங்களே தொட்டிலை ஆட்டுவதும் நாங்களே......
Rate this:
Share this comment
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-செப்-201909:16:37 IST Report Abuse
Thiaguஎப்படி பேரில்லாம ஊரை ஏமாத்திட்டு திரியரமே அப்படியா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X