பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 இதே நாளில் அன்று

செப்டம்பர் 12, 1832சி.வை.தாமோதரம் பிள்ளை: இலங்கை, யாழ்ப்பாணம் அருகே உள்ள சிறுப்பிட்டியில், வைரவநாத பிள்ளை -- பெருந்தேவி தம்பதிக்கு மகனாக, 1832 செப்., 12ல், பிறந்தார். 1853ல் நீதி நெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறி சார்ந்த, தமிழ் நுாலை பதிப்பித்தார். இதன் வாயிலாக, நுால் வெளியீட்டு துறையில், அவருக்கு இருந்த ஆர்வம் வெளிப்பட்டது.

'தமிழ்ப் பதிப்புத் துறை முன்னோடி' எனும் பெருமை பெற்றார். 1853ல், 'தினவர்த்தமானி' பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பு வகித்தார். சென்னை பிரெசிடென்சி கல்லுாரியில், தமிழ்ப் பண்டிதராகவும் பணிபுரிந்தார். 1858ல், சென்னை பல்கலையால் நடத்தப்பட்ட முதலாவது கலைமாமணி, பி.ஏ., பட்டத்துக்கான தேர்வில், மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேறினார். சட்டம் பயின்ற அவர், கும்பகோணத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

1884ல், புதுக்கோட்டை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பணி ஓய்வு பெற்ற தாமோதரம் பிள்ளைக்கு, 1895ல், 'ராவ் பகதுார்' பட்டமளிக்கப்பட்டது. 1901 ஜன., 1ல் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-செப்-201912:00:06 IST Report Abuse
Bhaskaran சாமிநாத அய்யர் பதிப்பிக்க இருந்த நூலை அவரிடமிருந்து இவர் வாங்கிகொண்டு போய்விட்டார் பிறகு அய்யரின் தந்தையார் சொல்படி அவரிடமிருந்து சிரமப்பட்டு மீட்டார் திராவிடையகத்தினர் ஐயரைவிட இவரைத்தான் பதிப்பு துறையின் தந்தை என்று கொண்டாடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X