பிளாஸ்டிக் தடை கூடாது!

Added : செப் 11, 2019 | கருத்துகள் (8)
Advertisement
பிளாஸ்டிக் தடை கூடாது!

பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ள இந்த நேரத்தில், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்திருப்பது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள், வேலை இழக்கும் நிலை உருவாகும். எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பதை விடுத்து, அதை சரியான முறையில் அப்புறப்படுத்தவும், மறுசுழற்சி செய்யவும், மோடி அரசு திட்டங்களை வகுக்க வேண்டும்.
ஜெய்ராம் ரமேஷ் , காங்கிரஸ் மூத்த தலைவர்
ஆக்கிரமிப்பு பகுதியை மீட்போம்!
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, வரலாற்று சிறப்புமிக்க முடிவு. அடுத்தகட்டமாக, பாக்., ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிகளை, மீட்டெடுப்பதே மோடி அரசின் நோக்கம். இது, பா.ஜ.,வின் பொறுப்பு மட்டுமல்ல. இந்த தீர்மானத்தை, நரசிம்ம ராவ் தலைமையிலான, காங்., அரசு, 1994ல், பார்லி.,யில் நிறைவேற்றி உள்ளது.
ஜிதேந்திர சிங் , பிரதமர் அலுவலக இணை அமைச்சர், பா.ஜ.,
மக்களை குறை கூறுவதா?
இளைய தலைமுறையினர், 'டாக்சி' பயன்படுத்துவதை விரும்புவதால் தான், கார் விற்பனை குறைந்துவிட்டது என்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்படியானால், பஸ், லாரி விற்பனை குறைவுக்கு யார் காரணம்? ஓட்டு போட்ட மக்களையே குறை கூறுவது நியாயமா? உங்கள் மோசமான பொருளாதார நிர்வாகமே இதற்கு காரணம். இந்த நிலைமையில், நம் பொருளாதாரம் எப்படி, 350 லட்சம் கோடி ரூபாயை எட்டும்?
அபிஷேக் சிங்வி , காங்கிரஸ் மூத்த தலைவர்

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-செப்-201904:00:49 IST Report Abuse
skv srinivasankrishnaveni பல ஏழைகள் பிளாஸ்டிக் லே சாப்பாடு வைக்குறதேயில்லீங்க ஸ்டீல் பாத்திரம் அல்லதுமண்சட்டிலேயேதான் வைப்பாங்க சமையல் அலுமியா தவளையை தான் யூஸ் பண்ணறாங்க பிச்சைக்காரன் கூட பிளாஸ்டிக் வேண்டாம் னு சொலர்றாங்களே பிளாஸ்டிக் உரப்பத்தியால் எவ்ளோகம்நிகள் மூடப்படும் அவாநிலைமை என்னாகும் என்று yosikkavendaamo singpoorile meksimal பிளாஸ்டிக் யூஸ் seyraale மைக்ரோவேவ் அடுப்புலேவைக்கும் விதமாகூட பிளாஸ்டிக் இட்டம்ஸ் கிடைக்குது '
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-செப்-201917:35:58 IST Report Abuse
Endrum Indian ஜெய்ராம் ரமேஷ்? இதன் உண்மையான அர்த்தம் என்ன??இதனால் பல இண்டஸ்ட்ரீஸ் மூடப்படும் அதாவது காங்கிரஸ் தலைகளின் பல இண்டஸ்ட்ரீஸ் என்று அர்த்தம் ஆகவே தான் இந்த பயம்
Rate this:
Share this comment
Cancel
sivakumar - Qin Huang Dao,சீனா
12-செப்-201911:40:42 IST Report Abuse
sivakumar கார் service மையத்தில் நடக்கும் பகல் கொள்ளை காரணமாகவே பலர் தங்களது கார்களை விற்றுவிட்டு ஓலா உபேர் போன்ற வசதிகளை பயன் படுத்துகிறார்கள். பார்க்கிங் , சர்வீஸ், இன்சூரன்ஸ், ஆயில் மாற்றம் கடும் போக்கு வரத்து சிக்கல்கள் , தேவைக்கு அதிகமான கார்கள் உற்பத்தி இவைகள் தான் கார் விற்பனை தொய்வுக்கு முக்கிய காரணங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X