புதிய வாகன சட்டம் மேற்கு வங்கத்தில் அமல் இல்லை: மம்தா

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement

கோல்கட்டா: புதிய மோட்டார் வாகன சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.



latest tamil news



வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில், புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கடந்த 1ம் தேதி (செப்.,1) நாடு முழுவதும் அமல்படுத்தியது. வாகன விதிகளை மீறுபவர்வர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் வகையில் இச்சட்டம் அமைந்துள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் இச்சட்டத்தை இன்னும் அமல்படுத்தவில்லை. அபராதத் தொகையை 50 சதவீதத்திற்கும் மேலாக குறைத்து குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.


latest tamil news



இதுகுறித்து தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை குறைப்பது குறித்து, மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இந்நிலையில், மேற்கு வங்கத்தில், புதிய வாகன சட்டம் அமல்படுத்தப்படாது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


latest tamil news



இதுகுறித்து அவர் கூறியதாவது: புதிய மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை, பார்லி.,யிலேயே நாங்கள் எதிர்த்தோம். இச்சட்டத்தை அமல்படுத்தினால், பொதுமக்களுக்கு அதிக சுமை ஏற்படும். அதிக அபராதம் வசூலிப்பதால், பிரச்னை சரியாகிவிடாது. மனித நேயத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் மாநில அரசு அதிகாரிகள், மக்களுக்கு அதிக சுமை என கருதுவதால், மேற்கு வங்கத்தில் இச்சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
12-செப்-201917:53:30 IST Report Abuse
madhavan rajan மம்தா மேற்கு வங்கத்தில் இப்படியும் ஆணை போடலாம். இந்த மாநிலத்தில் யாராவது ஹெல்மெட் போட்டு வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று. அப்போதுதான் மோடியை அவர் எதிர்ப்பது வெளி உலகிற்கு தெரியும்.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
12-செப்-201911:30:52 IST Report Abuse
M S RAGHUNATHAN தண்டனை கடுமையானால்தான் குற்றங்கள் குறையும். விதிகளை மீறினால்தானே அபராதம். ஆனால் இந்த சட்டம் அரசு போக்குவரத்து வாகனங்களுக்கு செயல்படுத்தப்படுமா? நான் ஒரு சிக்னலில் நின்றுகொண்டு இருந்தேன் . என் பின்னால் ஒரு அரசு பேருந்து வந்து அதன் ஓட்டுநர் என்னை ஏன் நிற்கிறாய் வண்டி எதுவும் எதிரில் இல்லையே என்று ஜாதியை சொல்லி கிண்டல் செய்தார் அவருக்கு என்ன தண்டனை கொடுக்க முடியும் காவல்காரர் பேசாமல் நிற்கிறார் இதுதான் இந்த நாட்டின் மக்கள் சட்டத்தை மதிக்கும் வழி
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
12-செப்-201917:54:49 IST Report Abuse
madhavan rajanஇவரே விதிமீறல் அரசுதான் நடத்திக் கொண்டிருக்கிறார். இவர் எப்படி மாநில மக்களை விதிமீறாமல் இருங்கள் என்று சொல்லுவார். எதுக்கும் ஒரு நியாயம் வேணுமில்ல....
Rate this:
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
12-செப்-201911:23:05 IST Report Abuse
Suman பொது மக்கள் விபத்து, உயிரிழப்பு அதிகரிக்கும்...மம்தாவிற்கு மக்கள் உயிரா முக்கியம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X