பயங்கரவாதி சுட்டுக் கொலை: ஜம்மு - காஷ்மீரில் அதிரடி

Added : செப் 11, 2019
Advertisement

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு - காஷ்மீரின், பாரமுல்லா மாவட்டத்தில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சோபூர் என்ற பகுதியில், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டதில், ஒரு பயங்கரவாதி இறந்தார்; மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

பலியான பயங்கரவாதி, லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும், காஷ்மீரில், பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவர் என்பதும், முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளதாக, பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கு, பல இடங்களில், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், ஸ்ரீநகர் உட்பட பல பகுதிகளில், நேற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இதையடுத்து, ஸ்ரீநகரில், வாகன போக்குவரத்து அதிகம் இருந்தது. ஜம்மு - காஷ்மீர், டி.ஜி.பி., தில்பக் சிங் கூறுகையில், ''காஷ்மீரில், மிக வேகமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. சமீப காலங்களில், பயங்கரவாத அமைப்புகளில், காஷ்மீரில் இருந்து, புதிதாக யாரும் சேரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,'' என்றார். 40 பயங்கரவாதிகள் ஊடுருவல்?பாக்., பகுதியில் இருந்து, கட்டுப்பாடு எல்லை கோடு வழியாக, 40 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக, பாதுகாப்புத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுப்பாடு எல்லை கோடு அருகே உள்ள பயங்கரவாத முகாமில் பயிற்சி முடித்த, 40 பேர், குழுவாக ஊடுருவி உள்ளதாகவும், பயங்கர ஆயுதங்களையும் தங்களுடன் எடுத்து வந்து உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து, கட்டுப்பாடு எல்லை கோடு பகுதிகளில், இந்திய பாதுகாப்புப் படையினரின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X