'பாலித்தீன்' எடுத்து வந்தால் தேக்கடியில் அபராதம்

Added : செப் 11, 2019
Advertisement

கூடலுார் : தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணியர், 'பாலித்தீன்' கவர்களில் உணவுப் பொருட்களை கொண்டு வந்தால், அபராதம் வசூலிக்கப்படும் என, கேரள வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவில் உள்ள சுற்றுலாத்தலமான தேக்கடியில், கடந்த இரண்டு தினங்களாக பயணியர் வருகை அதிகரித்துள்ளது. இவ்வாறு வருவோர், பாலித்தீன் கவர்களுடன், குரங்குகளுக்கு உணவுப் பொருட்களை போட்டு விட்டு செல்கின்றனர். குரங்குகள் உணவு உண்டபின், அக்கவர்களை வனப்பகுதிக்குள் போட்டு விடுகின்றன. மான், காட்டுப்பன்றி, யானை ஆகியவை இந்தபாலித்தீன் கவர்களை தின்று விடுகின்றன. இதனால், வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பும் ஏற்படுகிறது.

அதனால், தேக்கடிக்கு, பாலித்தீன் கவர்களுடன்உணவுப் பொருட்களை கொண்டு வந்தால் அபராதம் விதிக்கப்படும் என, கேரள வனத்துறையினர், சுற்றுலா பயணியரை எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X