பிரதமரின் முதன்மை செயலராக பிரமோத் குமார் மிஸ்ரா நியமனம்

Added : செப் 11, 2019
Advertisement
 பிரதமரின் முதன்மை செயலராக பிரமோத் குமார் மிஸ்ரா நியமனம்

புதுடில்லி : பிரதமர், மோடியின் முதன்மைச் செயலராக, பிரமோத் குமார் மிஸ்ரா, 71, நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த, 2014ல், பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்து, அவரது முதன்மைச் செயலராக, நிர்பேந்திர மிஸ்ரா இருந்து வந்தார். அவர், கடந்த மாதம், பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, அவரை, இரண்டு வாரங்களுக்கு பதவியில் தொடரும்படி, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.இந்நிலையில், பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலர் பொறுப்பில் இருந்த, பிரமோத் குமார் மிஸ்ரா, முதன்மைச் செயலர் அந்தஸ்துக்கு, நேற்று உயர்த்தப்பட்டார். மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது, அவரது அலுவலகத்தில், பிரமோத் குமார் மிஸ்ரா, முதன்மைச் செயலராக பணியாற்றினார். 2014-ல், மோடி, பிரதமராக பதவி ஏற்றபின், அவரது கூடுதல் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டார்.

இப்போது, முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரவைச் செயலர், பி.கே. சின்ஹா, கடந்த மாதம், பிரதமர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இப்போது, பி.கே.சின்ஹா, பிரதமரின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் பதவிக்காலம் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை, இரு அதிகாரிகளும் பதவியில் இருப்பர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X