பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம்

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (9)
Advertisement

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு பரிசாக வந்துள்ள பொருட்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் தொகை, கங்கை நதி தூய்மை திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது.






பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். உள்நாட்டிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இப்பயணங்களில், பிரதமருக்கு வழங்கப்பட்ட 2,700க்கும் மேற்பட்ட நினைவுப் பரிசுகளை மத்திய அரசு ஏலம் விட முடிவு செய்துள்ளது. செப்.,14ம் தேதி முதல் ஏலம் நடைபெற உள்ளது. குறைந்தபட்ச அடிப்படை விலையாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கிடைக்கும் தொகை, கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் கூறியதாவது: பிரதமர் மோடிக்கு அன்பளிப்பாக வரும் பொருட்களை, ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்க பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி கடந்த ஜனவரியில், 14 நாட்கள் நடந்த ஏலத்தில் 1,800 பொருட்கள் ஏலம் விடப்பட்டன. அதில் கிடைக்கும் மொத்த தொகையும் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கப்பட்டது.





அதன்பின்னர், பிரதமருக்கு அன்பளிப்பாக வந்த பரிசு பொருட்கள், செப்.,14ம் தேதி முதல் ஏலத்தில் விடப்பட உள்ளது. மொத்தமுள்ள 2,772 பரிசு பொருட்களை ஏலத்தில் விட்டு அதின் மூலம் கிடைக்கும் பணமும், கங்கை தூய்மை திட்டத்திற்கு வழங்கப்படும். ஏலத்திற்கான குறைந்தபட்ச தொகை ரூ.200, அதிகபட்ச தொகை ரூ.2.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - Doha,கத்தார்
12-செப்-201912:52:15 IST Report Abuse
Tamilan இந்த சங்கிகளுக்கு எதைத்தான் அரசியல் ஆக்குவது என்ற விவஸ்தையே இல்லை. இது ஒரு வழக்கமான நடைமுறை, எதோ மோடிதான் முதல் முறையாக செய்வது போல BUILD UP. ஒவ்வொரு பிரதமரும் அரசு முறை பயணத்தில் தங்களுக்கு கிடைக்கும் பரிசு பொருள்களின் மதிப்பு 5000, மேல் இருக்குமானால் அதை அரசிடம் ஒப்படைக்கவேண்டும். அந்த பொருட்ட்களை அவரே வைத்து கொள்ளவேண்டும் என்றால், அந்த பொருளின் மதிப்பில் 5000, ரூபாய்க்கு மேல் உள்ள தொகையை அரசிற்கு கட்டினால் மட்டுமே அந்த பொருட்களை எடுத்து கொள்ள முடியும். இது இந்தியா அரசின் விதி முறைகள். உலகமே போற்றும் பொருளாதார மேதை அய்யா மன்மோகன் சிங்க் பிரதமராக இருந்த போது கிடைத்த விலை உயர்ந்த பரிசு பொருட்களை, எந்தவித சத்தமமும், இது போல விளம்பரமும் இல்லாமலே அரசிடம் கொடுத்து விட்டு சென்றார், அரசியல் சித்து விளையாட்டு தெரியாத அப்பாவி.
Rate this:
Share this comment
Cancel
12-செப்-201911:09:43 IST Report Abuse
கோகுல், மதுரை திரு மோடியின் கோட் விலை கலர் பற்றி பேசுனவங்க எல்லாம் இப்போ வரிசையா வந்து கருத்து சொல்லவும்.
Rate this:
Share this comment
Cancel
12-செப்-201908:16:53 IST Report Abuse
Boopathi Subramanian உங்களை போன்ற ஒரு பிரதமர் 50 வருடங்களுக்கு முன்பு கிடைத்திருந்தால்.இன்று நாம் உலகத்தின் தலைமையாக இருந்திருப்போம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X