அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய் தான் கொடுப்போம்

Added : செப் 11, 2019 | கருத்துகள் (16)
Advertisement
 ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய் தான் கொடுப்போம்

விருதுநகர் : 'ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டுள்ளார். அவருக்கு வெள்ளரிக்காய் தான் கொடுப்போம்.,'' அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலாக கூறினார்.

விருதுநகரில் அவர் கூறியதாவது: வெளிநாடு பயணத்தில் பல்வேறு பால்பண்ணைகளை ஆய்வு செய்து அதன் தொழில் நுட்பங்கள், பசுக்களின் பராமரிப்பை ஆராய்ந்து சேலத்தில் மிகப்பெரிய பால்பண்ணை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இப்பண்ணையில் பசுமாடுகள் வளர்ப்பு, கால்நடை பல்கலை, ஆராய்ச்சி கழகம், விந்து உற்பத்தி நிலையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம்பெறும். ஓராண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு விடும். இத் திட்டங்கள் வெண்மைப்புரட்சியை ஏற்படுத்தும்.

தமிழக முதல்வர் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகத்தை கொண்டு வர முயற்சிக்கிறார். ஸ்டாலின் போன்றோர் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்தி வருகின்றனர்.தொழில் துவங்க வரும் அனைவரும் பெரும் முதலீட்டாளர்கள். உண்மையான தொழிலதிபர்கள். கோயம்புத்துாரில் நடந்த செம்மொழி மாநாட்டில் மெரீனாவில் இருந்தவர்களை கவிஞர் எனக் கூறி கோர்ட் சூட் அணிந்து உட்கார வைத்தார்களே அதை போன்று இல்லை.இதில்ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டுள்ளார்.

அவருக்கு வெள்ளை அறிக்கையும் கொடுப்போம், பச்சை அறிக்கையும் கொடுப்போம். மஞ்சள் அறிக்கையும் கொடுப்போம். என்ன வெள்ளை அறிக்கை...வெள்ளை அறிக்கை... வெள்ளரிக்காய் தான் கொடுப்போம். காலங்காலமாக ஏமாற்றும் நாடகத்தையும் தமிழர்களுக்காக உழைப்போம் என்று ஏமாற்றியும் வரும் கூட்டம் தி.மு.க.,வினர் தான். யாரையும் ஏமாற்றும் பணி எங்களுக்கு கிடையாது.முதல்வர் பழனிசாமியின் ஆண்மையான ஆட்சி நடந்து வருகிறது.

2015, 2019 ல் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது குறித்து கணக்கு காட்ட ஸ்டாலின் என்ன கணக்குப்பிள்ளையா. தொழில் துவங்குவதற்கான நடைமுறை தெரியாதா. புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவுடனே தொழிற்சாலை எங்கே என்றால் கேட்டால் எப்படி பதில் கூற முடியும்.தினகரன் எம்.ஜி.ஆர்., ரசிகரே கிடையாது. அவர் சிவாஜி ரசிகர். தி.மு.க., விற்கு போவது தப்பு கிடையாது என கூறிய தினகரனின் கபடநாடகம் வெளிப்பட்டுவிட்டது. விரைவில் தினகரனும் தி.மு.க.,விற்கு செல்வார், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
12-செப்-201914:06:05 IST Report Abuse
Visu Iyer வெள்ளை அறிக்கை கேட்டால் வெள்ளரிக்காய் தருவோம் என்று சொல்வதால் மக்கள் பணத்தில் இவர்களது வெளிநாட்டு பயணத்தில் எதயோ மறைக்க பார்க்கிறார்கள் என்பது புரியவில்லையா .. சோத்தில் பூசணிக்காயை மறைப்பதாக கேள்வி பட்டு இருப்போம்.. இவர்கள் ... வேறு எந்த காயையோ மறைக்க பார்க்கிறார்கள் என்று உங்களுக்கு கேட்க தோன்றுகிறதா..
Rate this:
Share this comment
sankar - Nellai,இந்தியா
12-செப்-201915:30:57 IST Report Abuse
sankarசிலேடையை புரிந்துகொள்ள முடியாத நீ எல்லாம் அந்த பெயருக்கு லாயக்கு இல்லை தம்பி...
Rate this:
Share this comment
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
12-செப்-201914:02:56 IST Report Abuse
Visu Iyer வெள்ளை அறிக்கை மக்களுக்கு தான்.. வெள்ளை அறிக்கைக்கு வெள்ளரிக்காய்க்கும் வித்தியாசம் தெரியாத அமைச்சர் பதவி விலக வேண்டும்.. மஞ்சள் அறிக்கை தருவோம் என்று சொல்கிறார்.. இதன் பொருள் என்ன தெரியுமா..? இது அரசின் அமைச்சர் சொல்ல கூடிய வார்த்தையா.. இந்த அமைச்சரை முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. இப்படி சொல்லி பாருங்கள்..
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
12-செப்-201910:43:46 IST Report Abuse
Anand நீங்கள் கூறிய நாகரிகம், பொதுஅறிவு போன்றவை உங்கள் தலைவர்கள் பப்பு, சுடலையே விட இவருக்கு 100 சதவிகிதம் அதிகம் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X