அரசியல் செய்தி

தமிழ்நாடு

இஸ்ரேல் பயணம்: ஸ்டாலின் கிண்டல்

Updated : செப் 13, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (53)
Share
Advertisement
இஸ்ரேல்,பயணம்,ஸ்டாலின்,கிண்டல்,தி.மு.க., தலைவர்,முதல்வர், பழனிசாமி

சென்னை : முதல்வர் பழனிசாமி உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல், கடலில் கலக்க அனுமதித்து விட்டு, உலக சுற்றுலாவின், ஒரு பகுதியாக, இஸ்ரேல் போவதாகக் கூறுவது, வேடிக்கையாக உள்ளது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: 'நீர் சிக்கனம் பற்றி அறிய, இஸ்ரேலுக்கு செல்கிறேன்' என, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அவர், கொள்ளிடம் ஆற்றிலிருந்து, கடலில் கலக்கும், 20 ஆயிரம் கன அடி தண்ணீர் பற்றி கவலைப்படாதது, வேதனை அளிக்கிறது. கொள்ளிடத்தில், கடந்த ஆண்டு, 100 டி.எம்.சி.,க்கு மேல்தண்ணீர், கடலில் வீணாக கலந்தது. இந்த முறை, 10 ஆயிரம் முதல், 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கலந்து வருகிறது.

வேளாண்மைக்கும், குடிநீருக்கும் பயன்பட வேண்டிய தண்ணீர், இப்படி பயனற்று போகிறது.உள்ளூரில் நீரைச் சேமிக்க முடியாமல், கடலில் கலக்க அனுமதித்து விட்டு, உலக சுற்றுலாவின், ஒரு பகுதியாக, 'இஸ்ரேல் போகிறேன்' என்பது, வேடிக்கையாக இருக்கிறது. ஜெயலலிதா அறிவித்த, கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது, இ.பி.எஸ்.பழனிசாமி, அரசு, விரைவில் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
20-செப்-201903:52:27 IST Report Abuse
 nicolethomson கொள்ளிடம் ஆற்றில் மணலை திருடிய வல்லம்படுகை சூரியமூர்த்தி உன்னோட கட்சிக்காரன் தானே , அவனை கட்ட சொல்றியா?
Rate this:
Cancel
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
12-செப்-201921:53:25 IST Report Abuse
Rasu Kutty யோவ் பரட்டை, நீர் ஆதாரங்களை பற்றி யார் பேசுவது? உன் தகப்பன் திருக்குவளை தீயசக்தி தான் கோடம்பாக்கத்தில் நீர்நிலையை மூடி வள்ளுவர் கோட்டம் கட்டியது.. இது போல நெறய இருக்கு நீங்க பண்ணினது..
Rate this:
Cancel
R chandar - chennai,இந்தியா
12-செப்-201918:37:08 IST Report Abuse
R chandar Good question by opposition leader this should be answered first , first we have to resolve the issue from the advise of local area engineers and farmers latter he can think of going to foreign tour , though this work was not completed till date at least TN government should think of using high end technology to build up check dam for the water v are getting from karnataka. This work to be finished with lattest technology by the help of public works department or with the help of leading civil work company like L&T and others
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X