பசு என்ற சொல்லைக் கேட்டதுமே சிலருக்கு சிலிர்க்கிறது: பிரதமர் மோடி

Updated : செப் 13, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (58)
Share
Advertisement

மதுரா: உத்தர பிரதேசத்தில், கால்நடைகளுக்கான தேசிய அளவிலான நோய் ஒழிப்பு திட்டத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ''பசு, ஓம் ஆகிய வார்த்தைகளை கேட்டாலே, சிலருக்கு, பயத்தில் முடி சிலிர்த்து விடுகிறது,'' என்றார்.latest tamil news
ரூ.12,652 கோடி:


பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., மாநிலம், மதுராவுக்கு நேற்று வந்தார். அவரை, மாநில முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, யோகி ஆதித்யநாத், மதுரா தொகுதியின், பா.ஜ., - எம்.பி.,யும், 'பாலிவுட்' முன்னாள் நடிகையுமான, ஹேமமாலினி ஆகியோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து நடந்த விழாவில், 'சுகாதாரமே சேவை, கால்நடைகளுக்கான தேசிய அளவிலான நோய் ஒழிப்பு திட்டம், கால்நடைகளுக்கான செயற்கை கருவூட்டல் மையம்' உள்ளிட்ட திட்டங்களை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

கால்நடைகள் நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு, வாய் மற்றும் கால்களில் ஏற்படும் நோய்களை ஒழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன்படி, நாடு முழுவதும், மாடு, ஆடு உள்ளிட்ட, 50 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 12 ஆயிரத்து, 652 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.


latest tamil news
நடவடிக்கை:


இந்த விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது: ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளால், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு, தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும், 2022க்குள், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், முற்றிலும் ஒழிக்கப்படும். இதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க, இந்த நடவடிக்கை மிகவும் அவசியம்.


பசு, ஓம்:


பசு, ஓம் ஆகிய வார்த்தைகளை கேட்டாலே, சிலருக்கு பிடிக்கவில்லை. இந்த வார்த்தைகளை கேட்டதுமே, அதிர்ச்சியில், அவர்கள் முடி சிலிர்க்கிறது. இது போன்ற வார்த்தைகளை கூறி, நாட்டு மக்களை, 16ம் நுாற்றாண்டுக்கு மத்திய அரசு அழைத்துச் செல்வதாக சிலர் கூறுகின்றனர். கால்நடைகள் இல்லாமல், கிராமப்புற பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய வைக்க முடியுமா; இதற்கு, யாரிடமாவது பதில் உள்ளதா?

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சுற்றுச்சூழலும், கால்நடைகளும் மிகவும் முக்கியம். அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கச் செய்யும் பொருளாதாரத்தை நோக்கி, நாம் செயல்படுகிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சி நடந்த இடத்தின் அருகே, குப்பையில் இருந்து, பிளாஸ்டிக்கை தனியாக பிரித்தெடுக்கும் பணியில், சில பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இதைப் பார்த்த, பிரதமர் மோடி, நேராக அங்கு சென்றார். அந்த பெண்களுடன் சேர்ந்து, தானும் தரையில் அமர்ந்தார். அவர்களுடன் பேசியபடியே, அவரும், குப்பையிலிருந்து பிளாஸ்டிக்கை பிரித்து எடுத்தார். இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு வந்திருந்த விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள் ஆகியோருடனும், பிரதமர் மோடி கலந்துரையாடினார்.


பரிசு பொருட்கள் ஏலம்:

பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட, 2,700க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள், செப்., 14ல் ஏலத்தில் விடப்பட உள்ளன. இதை, மத்திய கலாசாரத் துறை அமைச்சர், பிரகலாத் படேல் தெரிவித்தார். ''பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட, 2,772 பரிசுப் பொருட்கள், 'ஆன்லைன்' மூலம் ஏலத்தில் விடப்பட உள்ளன. பிரதமருக்கு அளிக்கப்பட்ட நினைவுப் பரிசுகளின் குறைந்த பட்ச விலை, 200 ரூபாயாகவும், அதிகபட்சமாக, 2.5 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, மோடிக்கு அளிக்கப்பட்ட, 1,800க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள், கடந்த ஜனவரி மாதம் ஏலத்தில் விற்கப்பட்டன. இரண்டு வாரங்களாக நடந்த இந்த விற்பனையில் திரட்டப்பட்ட தொகை, கங்கையை துாய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
12-செப்-201923:36:36 IST Report Abuse
Rajesh நல்ல ஊற ஏமாற்றுங்க. முதலில் மாட்டிறைச்சி ஏற்றுமதியை நிறுத்துங்கள் பார்ப்போம்........ உசுப்பேத்தியே உடம்ப புண்ணாகிடுங்க [யாரு உடம்புன்னு எல்லோருக்கும் தெரியும், யாரால் என்றும் எல்லோருக்கும் தெரியும்] s://www.exportgenius.in/blog/top-beef-exporters-in-india-report-on-beef-and-other-meat-exporters-22.php India is the largest beef exporter in the world followed by Brazil and Australia. It has registered export value of 3680 million USD by beef exports from world’s output (19886 million USD) in 2016. India has generated 931 million USD from its Meat Export Market during the first quarter of year 2017. It has maintained constant sales in this period with revenue value of 31.64%, 35.27% and 33.09% in January, February and March respectively. Meat has been exported majorly by India under HS code 02023000 with a quantity of 93.29%. The biggest market for beef industry of India, at 488 Million USD, is Vietnam in 2017 as per our report till 31st March. Allanasons Private Limited is the No. 1 beef exporter in India. It has exported 31.29% quantity out of total beef exports from India.
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
12-செப்-201917:41:21 IST Report Abuse
தாண்டவக்கோன் சனங்களுக்கு பசு(வ குடுப்பாங்க), ஆனா சேக்காளிகளுக்கும் அம்பானிகளுக்கும் பணம் (குடுப்பாங்க)
Rate this:
blocked user - blocked,மயோட்
12-செப்-201918:14:08 IST Report Abuse
blocked userபசு என்பது காமதேனு... எல்லாம் கொடுக்கும்... அதை சாப்பிட்டால் அடுத்த பிறவியில் கேவலமான ஜந்துவாக பிறக்க நேரிடும்......
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
12-செப்-201915:31:50 IST Report Abuse
ganapati sb பசுக்கள் விவசாயிகளிடம் வளரும்போது பால் உற்பத்தி விற்பனை லாபம் உயர்வதோடு விவசாயத்திற்கு இயற்கை உரமும் பசுவுக்கு தீவனமும் கிடைத்து விடும் தற்சார்பு வாழ்க்கைக்கு முன்பு போல கிராமங்கள் சென்று உலக பொருளாதாரத்தால் உள்ளூர் பாதிக்காத நிலை தொடரும் தமிழில் மாடு என்றாலே செல்வம்தானே பசுவினால் பாரதத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரம் உயரட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X