பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு வயதில் தொலைந்த மகன் 20 ஆண்டுகளுக்கு பின் மீட்பு

Added : செப் 12, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
 20 ஆண்டு, மீட்பு, அமெரிக்கா, மனு தாக்கல்

சென்னை: சென்னை புளியந்தோப்பில் ஒரு வயதில் தொலைந்த ஆண் குழந்தை 21ம் வயதில் பெற்றோரை சந்திக்க அமெரிக்காவில் இருந்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புளியந்தோப்பு நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ் 47; பெயின்டர். மனைவி சிவகாமி 45. இவர்களது இளைய மகன் சுபாஷ் 1999ல் 1 வயதில் காணாமல் போனார். காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டும் சுபாஷ் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2006ல் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.

விசாரணையில் அமெரிக்க தம்பதி திருவேற்காட்டில் இயங்கிய காப்பகத்தில் சுபாஷை தத்தெடுத்து 'அவினாஷ்' என்ற பெயரில் வளர்த்து வந்தனர். இதையடுத்து 2013ல் சுபாஷின் டி.என்.ஏ. பரிசோதனையில் சுபாஷ், ராகேஸ்வர ராவ் -- சிவகாமி தம்பதியின் மகன் என்பது உறுதியானது. இதையடுத்து பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பின் 8ம் தேதி அவினாஷ் வளர்ப்பு பெற்றோர் உதவியுடன் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தார். இங்கு தன் பெற்றோர் மற்றும் சகோதரி சரளா 27, சகோதரர் லோகேஷ் 24 ஆகியோரை சந்தித்தார்.

இது குறித்து நாகேஷ்வர ராவ் கூறியதாவது: சுபாஷ் பேசும் ஆங்கிலம் எங்களுக்கு புரியவில்லை. இன்னொருவர் உதவியுடன் தான் புரிந்து கொள்கிறோம். என் மகனை அவனது வளர்ப்பு பெற்றோரிடம் இருந்து பிரிக்க விரும்பவில்லை. அவர் நாளை அமெரிக்கா செல்ல இருக்கிறார், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
agni - chennai,இந்தியா
13-செப்-201908:39:39 IST Report Abuse
agni ஒரு வயதில் தொலைத்த குழந்தையை இப்படி ஒரு பெற்றோர் பெரும் போராட்டத்துக்கு பின் கண்டு பிடிப்பதே அதிசயம் தான் அதே போல்,குழந்தையை தத்தெடுத்து வளர்த்த காலம் போய் செயற்கை கருத்தரிப்பு, வாடகை தாய், பெருகி விட்ட இக்காலத்தில் யாரோ ஒருவரின் ஒரு குழந்தையை தத்தெடுத்து தன் பெற்ற குழந்தையாய் அன்போடு வளர்த்தது பற்றி கேட்பதே மிக அரிது ,பெரிய அற்புதம் தான் இக்காலத்தில்.
Rate this:
Cancel
Rajan - singapore,சிங்கப்பூர்
13-செப்-201907:19:58 IST Report Abuse
Rajan இதுதான் உண்மையான பாசம்
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-செப்-201903:10:58 IST Report Abuse
Chinnappa Pothiraj அவருடைய பெற்றோரிடம் இருந்து தெரிகிறது பெற்றோரிடமிருந்து அவருடைய குழந்தைகளுக்காக என்ன ஒரு மனமார்ந்த ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் பாருங்களேன் இதுதான் தாய்தந்தையர் புரிந்து கொள்ளுங்கள் குழந்தைகளே. இரண்டு பக்கமும் சந்தோசம் பெற்ற தாய் தந்தையர் வளர்ப்பு தாய் தந்தையர் மற்றும் மகன் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X