கலப்பு திருமணத்தை எதிர்க்க மாட்டோம்; உச்ச நீதிமன்றம் அதிரடி

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (30)
Share
Advertisement

புதுடில்லி: 'சட்டப்படி செய்து கொள்ளப்பட்ட கலப்பு திருமணங்களுக்கு எதிராக இந்த நீதிமன்றம் ஒருபோதும் செயல்படாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.latest tamil newsசத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த, 33 வயது முஸ்லிம் இளைஞர், 22 வயது ஹிந்து பெண்ணை காதலித்தார். இதையடுத்து, அந்த இளைஞர் ஹிந்து மதத்திற்கு மாறி, அந்த பெண்ணை, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதை எதிர்த்து, அந்த பெண்ணின் தந்தை, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதன் விபரம்: வேற்று மத பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக, இது போல மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் மோசடிகள் நிறைய நடந்து வருகிறது.என் பெண்ணை திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் இளைஞர், மீண்டும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார். எனவே, இந்த திருமணத்தை, தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.


latest tamil newsஇந்த மனுவை விசாரித்த சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், 'காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி, சேர்ந்து வாழ தடை விதிக்க முடியாது' என, உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, பெண்ணின் தந்தை, உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 'சட்டப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அதற்கு எதிராக இந்த நீதிமன்றம் செயல்படாது' என, கூறினார்கள். இந்த வழக்கு தொடர்பாக, மாநில அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை, வருகிற 24க்கு ஒத்தி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
12-செப்-201912:36:40 IST Report Abuse
kumzi ஜட்ஜி ஐயா பேசாம பேர மாத்துங்க ப்ளீஜ்
Rate this:
Cancel
Tamilan - Doha,கத்தார்
12-செப்-201911:52:30 IST Report Abuse
Tamilan அன்றே தந்தை பெரியார் சொன்னார் அது என்ன கலப்பு திருமணம், மனுஷனும், மாடுமா திருமணம் செய்கிறார்கள், ஆணும், பெண்ணும் தானே திருமணம் செய்கிறார்கல். இது சாதி மறுப்பு திருமணம், மத மறுப்பு திருமணம். இந்த நாடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், சமதர்ம சமுதாயம் உருவாக்க வேண்டுமென்றால், இது போன்ற மத மறுப்பு திருமணங்கள், சாதி மறுப்பு திருமணங்கள் கட்டாயமாக்க படவேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னார், இந்தியா சுதந்திரம் என்பது வெறும் அரசியல் சுதந்திரம் மட்டுமே கிடைத்துள்ளது, சமூக சுதந்திரம் கிடைக்கவில்லை. அரசியில் எல்லோருக்கும் சமமாக ஒரு ஒட்டு இருப்பது போல, சமூகத்திலும் எல்லோருக்கும் சம உரிமை வேண்டும். அரசியல் மற்றும் சமூக சுதந்திரம் அடைந்த நாடுகள் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும். ஆகையால் நாடு முழுவதிலும் இது போன்ற மத மறுப்பு திருமணம், சாதி மறுப்பு திருமணங்கள் ஊக்குவிக்க படவேண்டும், சட்ட பாதுகாப்பு அளிக்கவேண்டும். மத மறுப்பு, சாதி மறுப்பு திருமணம் செய்வோரின் பிள்ளைகளுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளித்து அவர்களை ஊக்குவிக்கப்பட வேண்டும்.
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
12-செப்-201921:13:49 IST Report Abuse
தமிழ்வேள்காதலிக்கிறார்கள் என்பதற்காக குடிகார சாதி நடுத்தெருவில் அருவாளோடு அலையும் சாதி சவஊர்வலத்தில் குடித்துவிட்டு ஆடும் சாதிகளோடு திருமண உறவு வைத்துக்கொள்ள இயலுமா ? உடலோடு உயிரோடு வந்த பழக்கம் மாறுமா ? தொடர்புடைய சமூகம் மாறவிடுமா ? காமம் காசு இவைமட்டுமே வாழ்க்கையாகாது...
Rate this:
Cancel
sri - trichy,இந்தியா
12-செப்-201911:34:15 IST Report Abuse
sri இது எல்லாம் CHEMICAL நம்ப மூலைல செய்யற வேலை. காதல் அப்படினு ஒன்னு கிடையாது . பருவத்தில் ஹார்மோன்கள் படுத்தும் பாடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X