சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தையின் தொடையில் ஊசி:

Added : செப் 12, 2019
Advertisement

சென்னை : அரசு மருத்துவமனையில், குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பூசி உடைந்து, அதன் ஒரு பகுதி, தொடைப் பகுதியில் சிக்கியிருந்தது. இந்த விவகாரத்தை தொடர்ந்து, நர்ஸ்களுக்கு அளிக்கப்படும், பயிற்சிகளை மேம்படுத்த, சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர், பிரபாகரன். அவரது மனைவி மலர்விழிக்கு, மேட்டுப்பாளையம், அரசு மருத்துவமனையில், ஜூன், 20ல், ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு, அடுத்த நாளில், நர்ஸ் ஒருவர், குழந்தைக்கு இடது தொடையிலும், கையிலும் தடுப்பூசி போட்டார். கவனக்குறைவாக ஊசி செலுத்தியதால், ஊசியின் ஒரு பகுதி உடைந்து, குழந்தையின் தொடைக்குள் சிக்கி கொண்டது; 18 நாட்களுக்கு பின், அது வெளியே எடுக்கப்பட்டது.இதையடுத்து, நர்ஸ் மற்றும் டாக்டர் மீது, குழந்தையின் உறவினர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மாநில மனித உரிமைகள் ஆணையமும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், வருங்காலங்களில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, நர்ஸ்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளதாக, மருத்துவ சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.மருத்துவ சேவைகள் இயக்குனர், டாக்டர் சுவாதி ரெத்தினாவதி கூறியதாவது:இந்த விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளோம். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் நர்ஸ்களுக்கு, தற்போது, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், துரதிருஷ்டவசமாக, இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன.

தற்போது அளிக்கப்பட்டு வரும் பயிற்சியை, மேலும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பணி சூழலில், கவனமாக செயல்படுவது குறித்தும், குழந்தைகளுக்கு ஊசி போடும்போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும், நர்ஸ்களுக்கு, விரிவான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X